அப்பா இறப்பும்.. அம்மா கனவும்.. பலரும் அறியாத விஜய் சேதுபதியின் மறுபக்கம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

சினிமா பின்பலம் ஏதுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வளர்ந்து முழுக்க முழுக்க தனது திறமையால் இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி:

இவர் முதன் முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக தேடி அலைந்து முதன் முதலில் 2010ம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்த ஹீரோவாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து பீட்சா ,நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும் , நானும் ரவுடிதான், சேதுபதி உள்ளிட்ட பல்வேறு தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னாடி நட்சத்திர நடிகர் என்ற இடத்தை பிடித்தார்.

ஹீரோ என்பதை தாண்டியும் வில்லன் நடிகராகவும் விஜய் சேதுபதி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு தனது திறமையை மக்களிடையே வெளிப்படுத்தி காட்டி பிரபலமானார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு:

கூத்துப்பட்டறையில் நடிப்பு கலையை கற்றுத் தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி அதன் பிறகு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு குறும்படங்களில் நடித்த பிரபலமானார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஆங்கர் ஆன கோபியுடன் அவர் கலந்துகொண்டு தனது அப்பா மற்றும் அம்மா குடும்பம் திரைப்படம் பல விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசி பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது அப்பா குறித்து மிகவும் எமோஷனலாக பேசிய விஜய் சேதுபதி நான் கார்த்திக் சுப்புராஜ் உடன் ஒரு குறும்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் கிட்டத்தட்ட 12 மணிக்கு என்னுடைய அம்மா எனக்கு போன் செய்து அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்என்றார்.

அதைக் கேட்டதும் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான நான் அந்த நேரத்தில் ஒரு பாக்கெட் தம் அடித்துவிட்டேன்.

அப்பாவின் திடீர் மரணம்:

அந்த அளவுக்கு எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது .அதன் பின்னர் நான் வீட்டிற்கு சென்று பார்த்தபோது என்னுடைய அப்பா உடல் முழுக்க சில்லென்று ஆகிவிட்டது .

பின்னர் அவர் இறந்துவிட்டார். அவரது இறப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் நான் ஒன்றுக்கும் உதவாதவன் என நினைத்துக் கொண்டிருந்தபோது உன்னிடம் ஏதோ இருக்குடா என்று சொல்லி என்னை தேற்றியவர் என்னுடைய அப்பா .

அது மட்டும் இல்லாமல் நான் மிகப்பெரிய நடிகர் ஆன பிறகு அவர் இல்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருக்கிறது.

அம்மாவின் கனவு:

என் அப்பா இருந்தபோது எங்களுக்குள் மிகப்பெரிய கஷ்டம் கடன் சுமை இது எல்லாமே இருந்தது என்னுடைய அம்மாவுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவோடு இருந்தார்.

எங்களுக்கு இருந்த ஒரு வீட்டை கூட நாங்கள் கடன் சுமையால் அதை விற்று விட்டோம். இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம்.

ஆனால் அதை பார்க்க என்னுடைய அப்பா இல்லை. என்னுடைய அப்பாவுக்கு கமல்ஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும் அவருடன் சேர்ந்து நான் விக்ரம் படத்தில் நடித்தேன்.

அதை வர பார்த்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். அதை பார்க்க கூட அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என விஜய் சேதுபதி மிகவும் எமோஷனலாக அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam