இப்போ மட்டும் எதுக்கு அப்பா வந்தாப்டி.. திடீர் கேள்விக்கு விஜய்சேதுபதி மகன் மழுப்பிதை பாருங்க..!

தமிழ் சினிமாவும் பாலிவுட் சினிமாவை போலவே கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி வந்து கொண்டிருக்கிறது. ஆம், பாலிவுட்டில் தான் மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த பிரபலங்களின் வீட்டு வாரிசுகள் அவர்களின் மூலமாகவே சினிமாவில் அறிமுகமாகி எந்த ஒரு கஷ்டமும் படாமல் தனக்கென தனி அடையாளத்தை பிடித்து விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான வாரிசு நடிகர்களின் பிள்ளைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் வாரிசுகளின் படையெடுப்பு:

அப்படி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலத்தில் தனது திறமையை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது வெற்றிகளை படைத்தது வந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இவரது மகன் தான் சூர்யா.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார்.

இதனிடையே பார்த்த வேகத்தில் சூர்யா கிடுகிடுவென வளர்ந்து ஹீரோவாகிவிட்டார். ஆம், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அதன்படி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் .

ஹீரோவாக விஜய் சேதுபதி மகன்:

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தனது குடும்பத்துடன் சூர்யா கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இந்த படத்தின் சூட்டிங் போது அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்கிற தன்னுடைய பெயருடன் முதல் படத்தில் நடிக்கப் போகிறேன் என கூறியிருந்தார் .

இந்த டீசர் வெளியீட்டு விழாவின் போது அதை நினைவுப்படுத்தி பத்திரிகையாளர் கேள்வி கேட்டனர். அதாவது, அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்ற தன்னுடைய பெயரை மட்டுமே கொண்டு முதல் படத்தில் நடிக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தீர்களே இப்போ இது ஏன் அப்பா வந்திருக்கிறார்?என கேட்டதற்கு திகைத்துப் போய் பதில் அளித்துள்ளார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

இன்று தந்தையர் தினம் அதனால்தான் என்னுடைய அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறேன்.

இப்போ மட்டும் எதுக்கு அப்பா வந்தாரு?

என்னுடைய அம்மா சகோதரி என அனைவரும் வந்திருக்கிறார்கள் என நச்சுன்னு பதிலளித்தார் சூர்யாவின் மகன்.

மேலும் பத்திரிகையாளர் சூர்யாவிடம், அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது உன்னுடைய அப்பாவின் உதவியோடு ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருவது குறித்து பல பேர் ரோல் போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

அதை பார்த்தீங்களா என கேட்டதற்கு…. பதில் அளித்த சூர்யா சேதுபதி, பெரிய ஹீரோக்களுக்கே பயங்கரமா ட்ரோல் போட்டு கலாய்க்கிறாங்க நான் எம்மாத்திரம்? என கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சினிமாவில் தான் ஒரு நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும்போதே தன்னுடைய மகனை எப்படியாவது மிகப்பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற ஒரு கனவில் விஜய் சேதுபதி இறங்கியிருக்கிறார்.

கோலிவுட்டில் வாரிசுகள் படையெடுப்பு:

அதன் மூலம் தான் பீனிக்ஸ் படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார் விஜய் சேதுபதி. மேலும், அவரின் ஒவ்வொரு அடுத்த கட்ட முயற்சிலும் விஜய் சேதுபதி தொடர்ந்து அவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

அதன் வெளிப்பாடுதான் இந்த டீசர் வெளியிட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டது. இதுதான் நிதர்சனமான உண்மை எனவே பாலிவுட் சினிமாக்களைப் போன்று இங்கும் வாரிசுகளின் படையெடுப்பு அதிகரித்துவிட்டது.

இப்படியே போனால் கோலிவுட் சினிமாவும் நட்சத்திர வாரிசுகளுக்காக தான் என எழுதி வைத்து விடுவார்கள் போல என கிசுகிசு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version