“கல்யாணம் பண்ணா இது போயிடுமா..” நடிகர் விஜய் பதிலை பாருங்க..

தமிழ் திரை உலகில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளி வந்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து மற்றோரு படத்தில் விஜய் நடித்து வருவதோடு அரசியலிலும் களம் இறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: “நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க.. தமிழ் சினிமா..” வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்..!

இதனை உறுதி செய்யக்கூடிய விதமாக தற்போது தளபதி விஜயின் அரசியல் கட்சி அறிவிப்பு மற்றும் பல்வேறு வகையான அரசியல் நகர்வுகள் இணையங்களில் வெளி வந்து பேசும் பொருளாக மாறி இருந்தது அனைவருக்கும் நன்கு தெரியும்.

நடிகர் விஜய்..

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அத்தோடு கோட் திரைப்படம் மற்றும் தளபதி 69 படங்களை முடித்த பின் முழு நேர அரசியலில் களம் இறங்குவார் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சினிமாவில் இருந்து விலகுவது இவரது ரசிகர்களுக்கு பெருத்த வருத்தத்தை தந்தாலும் அரசியலில் மக்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்தால் இது போய்விடுமா..

இந்நிலையில் சினிமா வாழ்க்கையை பொருத்த வரை அதிகளவு ரொமான்டிக் படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்தவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளி வந்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இதற்கிடையில் 1999 ஆம் ஆண்டு தளபதி விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து காதல் நாயகனாக தமிழக ரசிகர்களின் மத்தியில் திகழ்ந்த விஜயிடம் திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் போய்விடுமா? என்று பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த தளபதி விஜய் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அதற்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி படமாக மாறும் என்ற கருத்தை கூறினார்.

மேலும் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடுமா? என்று தன்னிடம் கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வேன் என்று பதில் அளித்து இருக்கக்கூடிய விஷயம் தற்போது இணையங்களில் அதிகளவாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் விஜயின் இந்த சாமர்த்தியமான பதிலை மெச்சி இருப்பதோடு அவர் கூறியதில் அர்த்தம் உள்ளது என்பதை அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

ஒரு சமயம் ஹீரோயின்களுக்கு இது போல திருமணம் ஆனால் மார்க்கெட் டல் ஆகிறது என்பதும் ஒரு வகையில் மாயை தான். அவர்கள் பிள்ளை குட்டி என்று கவனத்தை செலுத்துவதால் தான் திரை பக்கம் கவனத்தை செலுத்த முடியாமல் உள்ளது என்ற உண்மையை பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: என்னது.. இந்த ஐட்டம் பாட்டை பாடினது ஸ்ரீவித்யாவா..? கிறுகிறுன்னு வருதே..

இதனை அடுத்து சமூக தள வாசிகள் அனைவருமே கல்யாணம் பண்ணா இது போயிடுமா என்ற கேள்விக்கு நடிகர் விஜய் தந்த பதிலை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version