பிக்பாஸ் சீசன் 8.. போட்டியாளர்கள் உத்தேச பட்டியல்..! தரமான போட்டியா இருக்குமே..!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு கூறலாம். அதில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி, மற்றொன்று குக் வித்து கோமாளி நிகழ்ச்சி. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குதான் டிவி சீரியல் ஆடியன்ஸ் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது

தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளாக இவை இரண்டும் இருக்கின்றன. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் நிறுவனங்களுக்கு தங்களது விளம்பரங்களை வெளியிடுவதற்கு அதிகமாக உதவி வரும் காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

பிரபலமான நிகழ்ச்சி:

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதுமே சண்டைகள் இருந்து வருவதால் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. எப்போதுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும்.

அந்த வகையில் அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் துவங்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியையும் வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் யாரெல்லாம் இந்த சீசனில் போட்டியாளராக வருவார்கள் என்பது கொஞ்சம் சஸ்பென்ஸான விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக இருக்கும் அமலா சாஜி பிக் பாஸ்  சீசன் 8 ல் கலந்து கொள்வார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள்:

அதேபோல பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன், இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய காதலியான ஷாலின் சோயாவுடனும் சேர்ந்து கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஷாலின் சோயாவிற்கு குக் வித் கோமாளி மூலமாகவே அதிக ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

அதேபோல விஜய் டிவியில்  பிரபல தொகுப்பாளராக பல வருடங்களாக இருந்து வரும் மாகாபா ஆனந்த் அடுத்து பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முந்தைய பிக்பாஸ் சீசனிலேயே இவர் கலந்துக்கொள்ள இருந்தார்.

ஆனால் அப்பொழுது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல தற்சமயம் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நடிகை சோனியா அகர்வால், பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதே போல நடிகை கிரண் பெயரும் இதில் அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திராஜா சங்கர் மற்றும் சிவாங்கி உள்ளிட்ட நபர்களும் இந்த பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version