திரைப்படங்களில் நடிக்கக்கூடிய ஹீரோயினிகளுக்கு எந்த அளவு பிரபலம் உள்ளதோ அது போல சின்ன திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் மக்கள் மத்தியில் பேரும் புகழும் கிடைத்துள்ளது. அந்த வரிசையில் தொகுப்பாளினி DD என்கிற திவ்யதர்ஷினி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.
ஹீரோயின்களுக்கு எப்படி ஒரு ரசிகர் படை இருக்குமோ, அது போல டிடி-க்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே அந்த ரசிகர் படை எப்போதும் காத்திருக்கும்.
தொகுப்பாளினி டிடி..
தொகுப்பாளினி டிடி சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கிய டிடி அண்மைக்காலமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இதற்கு காரணம் அவர் உடல் நிலை தற்போது சற்று சீராக இல்லாமல் இருப்பதால் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருந்து வருகிறார்.
மேலும் அதிக நேரம் தன்னால் நிற்க முடியாது என்பதால் வீல்சேர்களில் பயணம் செய்து வரும் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத காரணத்தால் தற்போது விஜய் டிவியில் பார்க்க முடியவில்லை.
இவர் முன்னணி நட்சத்திரங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்க கூடியவர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சில சினிமாக்களில் சின்ன, சின்ன கேரக்டரை செய்து அசத்தியவர்.
சொத்து மதிப்பு தெரியுமா..
அந்த வகையில் அண்மையில் கூட இவர் ஜோஸ்வா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். அது மட்டுமல்லாமல் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளி வர உள்ளது.
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் தான் வாங்கிய பொருட்கள் பற்றி விவரங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் சொல்லக் கூடிய வகையில் வெளியிடுவார்.
இதையும் படிங்க: சின்ன வயசுல இப்படி போஸ் குடுத்திருந்தா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாமே.. அதிர வைக்கும் அஞ்சனா..
இதனை அடுத்து தற்போது இவரது சொத்து மதிப்பு இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளது. இதற்குக் காரணம் தொகுப்பாளினியாக திகழ்ந்த டிடி யின் சொத்து மதிப்பு சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரு நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்க சுமார் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அதனை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு தொகுப்பாளினி டிடி அக்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா? படித்ததும் கிறுகிறுன்னு வருதே என்ற வாக்கியங்களை பதிவு செய்து அவரை பாராட்டி வருகிறார்கள்.