விஜய் டிவியை எடுத்து விழுங்க கூடிய மாஸ்டர் பிளான்… செக் வைக்க போகும் சன் டிவி… ஆயிரம் எபிசோட் இயக்குனருக்கு ரூட்டை போட்டதா..?

 தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரையில்  ரியாலிட்டி ஷோக்கள் சீரியல்கள் என்றாலே அதற்கு பெயர் சொல்ல கூடிய சேனல் விஜய் டிவி தான். ஆனால் சீரியல் என்ற ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்திய சன் டிவிக்கு இன்று வரை சீரியலுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

 மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இளம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசம் இல்லாமல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 ஏற்கனவே சன் டிவியில் டாப் சீரியல்களாக அமைந்த கோலங்கள் சீரியலை இயற்றிய இயக்குனர் திருசெல்வம் மீண்டும் ரீஎன்றி கொடுத்து எதிர்நீச்சல் என்ற சீரியலை தற்போது இயக்கி வருகிறார்.

 தினமும் இரவு ஒன்பதுரை மணி என்றாலே அனைவரும் அட்டனன்ஸ் போட்டு விடக்கூடிய அளவுக்கு வீட்டில் சமையல் கட்டில் கூட டிவியை வைத்து பார்க்கக் கூடிய பெண்களின் ஆதிக்கம் தற்போது ஒருபுறம் இந்த சீரியலுக்காக உருவாகிவிட்டது என்று கூறலாம்.

 அந்த அளவு பெண்களின் கனவுகளையும் பெண்களின் உரிமைகளையும் மீட்டெடுக்கக்கூடிய இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது. மேலும் இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் வலம் வரும் நடிகை மதுமிதாவின் நடிப்பு ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது.

 ஆண்களை எதிர்த்து போராடக்கூடிய கேரக்டர் ரோலை மிகவும் சிறப்பாக அவர் செய்திருக்கிறார். சன் டிவி சீரியல் என்றாலே ஓவர் சென்டிமென்ட் என்று அனைவரும் கூறுவோம். ஆனால் இந்த சீரியல்களை பார்க்கக்கூடிய ஆண்களும் அழுது விடுவார்கள் அந்த அளவுக்கு இந்த சீரியல் உள்ளது.

 இதற்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே இரண்டு, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களை வாயில் போட்டு விழுங்கி டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து தந்திருக்கும் எதிர்நீச்சல் தற்போது குறிப்பிடத்தக்க வரிசையில் உள்ளது.

இதனை அடுத்து எதிர்நீச்சல் சீரியல் தற்போது பக்கபலமாக சன் டிவியின் டிஆர்பி ரேட்டை கூட்டிவிட்டது என அடித்து கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …