நீ லெஸ்பியனா..? என்ற கேள்விக்கு விஜய் டிவி ஜாக்லின் கொடுத்த பதிலை பாருங்க..!

விஜய் டிவியில் பிரபலமான தொகுபாளினியாக இருந்த பலரும் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகையும் தொகுப்பாளியும் ஆன ஜாக்கலின் ஃபெர்னாண்டஸ்.

இவர் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் உள்ள சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் ஜாக்குலின் நடித்திருக்கிறார். நயன்தாரா நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஜாக்லின் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சீரியலில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரிக்க துவங்கியது. முதன் முதலில் தேன்மொழி பி ஏ என்கிற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றார் விஜய் டிவி ஜாக்லின்.

விஜய் டிவி மூலமாக பிரபலமானதாலே அவரது பெயர் விஜய் டிவி ஜாக்லின் என்று மாறியது. ஏனெனில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று ஒரு நடிகை ஏற்கனவே இருப்பதால் இவர் விஜய் டிவி ஜாக்லின் என்று அறியப்படுகிறார். விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல எபிசோடுகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக இவர் பங்கேற்பார் என்பது பலரது எண்ணமாக இருந்தது. ஆனாலும் அவருக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து சர்ச்சை:

இருந்தாலும் இந்த முறை பிக்பாஸ் சீசனில் இவர் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவரை பற்றி மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு பதில் கொடுக்கும் வகையில் சமீபத்தில் பேசியிருந்தார் ஜாக்லின்.

அதில் அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர் கேட்கும் பொழுது நீங்கள் ஒரு பெண்ணுடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறீர்கள். அதை பார்த்த ஒரு நெட்டிசன் நீங்கள் இருவரும் லெஸ்பியனா என்று கேட்கிறார், அதற்கு என்ன பதில் கூறுவீர்கள் என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த ஜாக்குலின் இவர் மட்டுமல்லை. நான் இரண்டு மூன்று தோழிகளோடு சேர்ந்து போட்டோ எடுத்து போட்டாலே உடனே லெஸ்பியானா என்றுதான் அடுத்த கேள்வியை கேட்கிறார்கள். இது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

கல்யாணமான பெண்களுடன் புகைப்படம் எடுத்து போடும்போது கூட இதே மாதிரியான கேள்வியை தான் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் இவங்களுக்கு அறிவு அவ்வளவுதான் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மேலும் இவன் யார் பைத்தியமா இருப்பான் போல வேற பையனோட அவளுக்கு கல்யாணம் ஆயிட்டுடா என கூற தோன்றுகிறது என்கிறார் ஜாக்குலின்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version