அந்த டிவி நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு… அணி மாறுகிறாரா குரேஷி… விஜய் டிவிக்கு அடுத்த பிரச்சனை..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது அதில் பங்கு பெறும் போட்டியாளர்களை விடவும் அதில் இருக்கும் கோமாளிகளின் காரணமாகவே அதிக பிரபலமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் குக் வித் கோமாளியால் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற ஒரு சில நபர்கள் கோமாளிகளாக இருக்கின்றனர்.

தொடர்ந்து அவர்களுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே கோமாளியை மக்கள் பார்த்து வருகின்றனர். விஜய் டிவியில் சேனலில் குக் வித் கோமாளியை பொறுத்தவரை அதன் நகைச்சுவைக்கு தான் அதில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

ரொம்ப நல்லா இருக்கு

அந்த நகைச்சுவைகளை செய்யக்கூடியவர்களாக இந்த கோமாளிகள்தான் இருந்து வருகின்றனர். இதே நிகழ்ச்சியை சன் டிவி துவங்கி வைத்த பொழுது விஜய் டிவியை சேர்ந்த பல கோமாளிகளை அவர்கள் தன்வசம் இழுக்க நினைத்தனர். ஆனால் பலரும் ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருவதால் சன் டிவிக்கு மாறுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இருந்தாலும் முன்பே விஜய் டிவியில் இருந்த நிறைய நபர்கள் இப்பொழுது சன் டிவியில் பணிபுரிந்து வருவதை பார்க்க முடியும். மேலும் ஜட்ஜ் ஆக இருந்த வெங்கடேஷ் பட் மட்டுமே கூட இப்பொழுது சன் டிவியில் பங்கேற்று வருகிறார்.

அணி மாறுகிறாரா குரேஷி

இந்த நிலையில் குக் வித் கோமாளியில் மிக முக்கிய கோமாளியாக இருக்கும் குரேஷியும் தற்சமயம் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் குரேஷியை பொறுத்தவரை அவர் குக் வித் கோமாளியில் மிக முக்கியமான கோமாளி ஆவார்.

மூன்றாம் சீசனிலிருந்துதான் இவர் குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார். ஆனால் எந்த ஒரு வேடம் போட்டாலும் அதை சிறப்பாக நடித்துக் காட்டக் கூடியவராக அவர் இருக்கிறார். மேலும் மிமிக்ரி திறமையும் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு வரவேற்புகள் இருந்து வருகின்றன.

விஜய் டிவிக்கு அடுத்த பிரச்சனை

இந்த நிலையில் சன் டிவியில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி துவங்கி பொழுது அதில் பங்கு கொள்ள வேண்டும் என்று குரேஷியிடம் கேட்கப்பட்டிருக்கிறது அதற்கு பதில் அளித்த குரேஷி. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலமாகதான் நான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தேன்.

எனவே நான் தொடர்ந்து அதில் பங்கேற்று இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்த குரேஷி கூறும் பொழுது குக் வித் கோமாளி போலவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்  குக் டூப் குக் நிகழ்ச்சியும் கூட நன்றாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இதனை வைத்து பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version