இரண்டாம் திருமணதிற்கு ரெடியான பிரியங்கா..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே.  தொகுப்பாளினியாக இருந்தாலும் கூட பிரியங்கா தனிப்பட்டு நிகழ்ச்சியில் தெரியும் அளவிற்கு கலகலப்பாக இருக்கக்கூடியவர்.

2009 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் க்ரீப்பி கேர்ள் என்கிற நிகழ்ச்சியை முதன்முதலாக தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அதன் மூலமாக அவருக்கு தொகுப்பாளினியாக தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

சன் டிவியில் பிரியங்கா:

அதனைத் தொடர்ந்து சன் டிவியிலும் சில வருடங்கள் பணிபுரிந்து வந்தார். 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருக்கிறார் பிரியங்கா.

மேலும் விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருந்து வருகிறார் பிரியங்கா. 2021 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரியங்கா. அதன் மூலமாக மேலும் இவர் பிரபலமானார்.

குக் வித் கோமாளி:

இந்த நிலையில் ஒரு தொகுப்பாளினி என்பதையும் தாண்டி விஜய் டிவியில் நடக்கும் நிறைய நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வருகிறார். தற்சமயம் நடக்கும் குக் வித் கோமாளி சீசன் 5 லும் குக்காக பங்கேற்று வருகிறார் பிரியங்கா.

2014 ஆம் ஆண்டு இவர் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் பிரிந்து விட்டதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

மறுமணம் குறித்த சர்ச்சை:

இந்நிலையில் அவர் தற்சமயம் பிரவினை விவாகரத்து செய்துவிட்டு தனியாகதான் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு நடுவே பிரியங்காவின் அம்மா தொடர்ந்து அவரை மறுமணம் செய்து கொள்வதற்கு வற்புறுத்தி வரும் காரணத்தினால் மறுமணத்திற்கு தயாராகி வருகிறாராம் பிரியங்கா.

மேலும் விஜய் டிவியில் உள்ள சீரியல் தயாரிப்பாளர் ஒருவரைதான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார் என்று இணையத்தில் ஒரு பக்கம் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அதற்கு எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் இதுவரை வெளிவரவில்லை எனவே இது ஒரு வதந்தி என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam