3 மாசம் குழந்தையின் கடிதத்தை படித்த விஜய் டிவி பிரியங்கா..! அம்பலமான கடத்தல் நாடகம்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர ஹீரோயின் என்ற அளவுக்கு அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் பிஜே பிரியங்கா .

இவர் விஜய் டிவியில் வருவதற்கு முன்னர் சில பல குறும்படங்களில் நடித்தும் பின்னர் ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி , சன் மியூசிக் , ஸ்டார் விஜய் போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார் .

விஜே பிரியங்கா:

ஆரம்பத்தில் தன்னுடைய 11 வயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட விஜே பிரியங்கா தன்னுடைய குடும்பத்தை பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இந்த சமயத்தில் தான் பிஜே பிரியங்கா எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு அதன் பிறகு எம் சி செய்து அதன் மூலம் மாதம் 5,000 பணத்தை சம்பாதித்து வந்திருக்கிறார் .

பின்னர் தொலைக்காட்சிகளில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் அவருக்கு ரூ. 500 , 1000 என அன்றாடம் வருமானம் கிடைக்க ஆரம்பித்ததாம்.

பிறவியிலே காமெடியாகவும் ,நகைச்சுவையாகவும் பேசும் பிரியங்காவுக்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்துள்ளது.

குடும்பச் சுமை ஏற்ற பிரியங்கா:

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முழுக்க முழுக்க தன்னை சார்ந்திருப்பவர்கள் எல்லோரையும் மிகுந்த மகிழ்ச்சியோடு வைத்திருப்பார்.

அப்படித்தான் ஒருமுறை தனது நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் செல்லும்போது திடீரென. தன்னை கடத்தி விட்டதாக நாடகம் ஆடி அங்கிருந்த எல்லோரையும் பிராங்க் செய்துள்ளார்.

அப்போது இங்கு இருக்கும் யார் என்னை வந்து காப்பாற்றுகிறார்கள் என பார்ப்போம் என பிராங்க் செய்து அங்கிருந்த எல்லோரையும் பின்னர் சிரிக்க வைத்துள்ளார். இதை அவர் கிட்டத்தட்ட ஆறு வருடத்திற்கு முன்பு செய்தாராம்.

அது அப்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த அளவுக்கு மிகவும் சீரியசான விஷயமாக இருந்தாலும் பிரியங்கா அதை மிகச் சிறந்த காமெடியாக மாற்றிவிடுவாராம்.

பிறவியிலே நகைச்சுவையான குணம்:

விஜய் டிவியில் தொகுப்பாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைக்க ஒல்லி பெல்லி சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலமாக பிரியங்கா மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதன் மூலம் அவர் கணிசமான வருமானத்தையும் சம்பாதிக்க தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார்.

தனது அம்மா மற்றும் தம்பிக்கு பிடித்தமான பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வந்தார். இதனிடையே விஜி பிரியங்கா தன்னுடன் விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமண வாழ்க்கை அவருக்கு மகிழ்ச்சியானதாக அமையவில்லை இருவரும் பிரிந்து வாழலாம் என முடிவெடுத்து விவாகரத்து செய்துவிட்டனர்.

கணவருடன் விவாகரத்து:

அந்த சமயத்தில் தான் பிஜே பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தையும் வருஷத்தையும் அனுபவித்து கொண்டிருந்தார்.

பின்னர் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு எண்ணத்தில் அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் தான் தன்னுடைய தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பிரியங்கா விடம் கூறினார்கள்.

அது மட்டும் இல்லாமல். பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் போது அவரிடம் கருவில் இருக்கும் மூன்று மாத குழந்தையின் கடிதம் என்று கூறி… குட்டி சாக்ஸில்”மை டியர் ஜியா ஐ லவ் யூ சோ மச்” நீங்க பிக் பாஸ்க்கு சென்று திரும்பி வந்தபோது என் அம்மாவின் வயிற்றில் நன்றாக வளர்ந்திருப்பேன். உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் எழுதப்பட்ட ஒரு லெட்டரை அவரது தம்பி கொடுத்தாராம்.

அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த பிரியங்கா பிரியங்கா அந்த லெட்டரை பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 90 நாட்கள் தினமும் எடுத்து எடுத்து பார்த்து படித்துக் கொண்டிருந்தாராம் .

இது யாருக்கும் தெரியாமல் நடந்ததாம். பின்னர் அந்த வீட்டில் இருந்து வெளியே வந்ததும் தம்பிக்கு ஒரு மகள் பிறக்க அந்த குழந்தைதான் தனக்கு எல்லாமே மிகுந்த மகிழ்ச்சி கொடுத்தது.

மூன்று மாத கருவின் கடிதம்:

என் குடும்பத்தை சந்தோஷப்படுத்தியது எல்லாமே என் தம்பி மகள் தான் என பல பேட்டிகளை பிரியங்கா மிகுந்த எமோஷனலாக பேசியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் பிரியங்கா கணவரை பிரிந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த சமயத்தில் அவரை மனரீதியாக மிகவும் மகிழ்ச்சி படுத்தியது தம்பி மகள் ஈவா தானாம்.

எனவே அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் என் உலகத்திலேயே எனக்கு அவள்தான் முதல் குழந்தை என பிரியங்கா பேட்டி ஒன்றில் எமோஷனலா கூறியிருந்தது குறிப்பிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version