பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்.. தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் கிடைத்து வருவது உங்களுக்கு அறிந்த விஷயங்கள் ஒன்றுதான். அந்த வகையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த நடிகரின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பதை விளாவாரியாக விளக்கக்கூடிய வகையில் அவரின் மகள் வெளியிட்டு இருக்கக் கூடிய வீடியோவானது இணையங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்..

பொதுவாகவே இன்று உலகம் எங்கும் கேன்சர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் அதிகரித்து ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பல்வேறு வகையான கேன்சர் நோய்களால் பாதிப்புகள் ஏற்படுவதை அடுத்து கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நோயின் தாக்கம் பெருமளவு அதிகரித்து இருப்பதற்கு காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் பழக்க வழக்கங்களை முக்கியமாக நாம் சொல்லலாம்.

உயிர் கொல்லியான இந்த நோயின் தாக்கத்தில் நடிகைகள் பலரும் தாக்குதலுக்கு உள்ளாகி பின் அதில் இருந்து மீண்டு வந்த கதை உங்களுக்கு மிக நன்றாக தெரியும், குறிப்பாக மனிஷா கொய்ராலா, கௌதமி போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதுபோலவே கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கம் என்ற நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது மீண்டு வந்த கதையும் கேன்சர் நோயாளிகளுக்கு தற்போது ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில் இவரது பேச்சுக்களும் செயல்களும் உள்ளது.

அந்த வகையில் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரட்டைக் குதிரையில் பயணம் செய்து வந்த நடிகர், அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர், கேன்சர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் விஷயத்தை அவர் மகள் உருக்கமாக வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்..

இந்த நடிகர் பெயர் நேத்ரன் இவர் தொலைக்காட்சி சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். பெரும்பாலும் வில்லத்தனத்தை காட்டி நடிக்க கூடிய இவர் முதல் முதலாக மருதாணி சீரியலில் அறிமுகம் ஆனார்.

இந்த சீரியலை அடுத்து பல சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு அபிநயா, அஞ்சனா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.

இவர் சிலவருடங்களாகவே சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் இருந்து விலகி இருந்த நேத்ரன் குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார். அதில் மனைவி தீபா குறிப்பாக சிங்க பெண்ணே, முத்தழகு போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ரேவன் திரைப்படத்தில் இவரது மூத்த மகள் அபிநயா கதாநாயகியாக நடித்து வருவதோடு சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு தன் தந்தையோடு இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்த நிலையில் தான் நேற்று நேத்திரன் மற்றும் தீபாவின் மகள் அபிநயா தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் தன்னுடைய தந்தை கடந்த சில வாரங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதற்கான சிகிச்சையும் நடந்து முடிந்து விட்டது. ஆனால் ஐசியூவில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் கல்லீரலில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் சொன்ன நிலையில் அவர் விரைவில் குணம் அடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருப்பதோடு நிச்சயமாக அனைவரது பிரார்த்தனையும் அவரை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version