முன்பை விட தற்சமயம் சீரியல் என்பது அதிக வருமானம் தரும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. முன்பெல்லாம் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிப்பவர்களுக்கு ஓரளவு சம்பளம் கிடைக்கும். ஆனால் சீரியலில் நடிப்பவர்களுக்கு மிக சாதாரண அளவில்தான் சம்பளம் கிடைக்கும்.
ஆனால் சீரியலுக்கான மார்க்கெட் என்பது இப்பொழுது உயர்ந்துவிட்டது அதனால் சீரியலில் முக்கிய நடிகர்களாகவும் நடிகைகளாகவும் இருப்பவர்களுக்கு சம்பளம் மிக அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட பிரபல நடிகை ஆலியா மானசா 2 கோடி அளவில் வீடு கட்டி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சீரியல் நடிகர்கள்:
இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக அதிக பிரபலமாக இருப்பவர் நடிகர் முத்து. இவர் ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். அப்படி என்றால் மாதத்திற்கு கிட்டத்தட்ட 3.60 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.
ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா
பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் கோபி, இவர் அந்த சீரியலிலும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்து வருகிறார் ஒரு நாளைக்கு கோபி 10,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.
மகாநதி சீரியல் மூலமாக பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் ரூபாய் 10,000 தினசரி சம்பளமாக வாங்கி வருகிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்சமயம் நாடகமாக வெளியாகி வருகிறது.
கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
அதில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கதிரின் மாத சம்பளம் தினசரி சம்பளமாக 9,000 ரூபாய் வாங்கி வருகிறார். விஜய் டிவியில் உள்ள சின்ன மருமகள் சீரியலில் நடிக்க கூடிய சேது 9,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். ஆகா கல்யாணம் சீரியலில் நடிக்கும் சூர்யா 9000 ரூபாயை சம்பளமாக வாங்கி வருகிறார்.
அதே விஜய் டிவியில் பிரபலமான மோதலும் காதலும் என்கிற சீரியலில் நடிக்க கூடிய விக்ரம் தினசரி 7000 ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார். பிரபல சீரியலான பொன்னி சீரியலில் நடிக்கக்கூடிய சக்தி ஒரு நாளைக்கு 7000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.
முத்தழகு சீரியலில் நடிக்க கூடிய பூமிநாதன் அவர் நாளைக்கு 8000 ரூபாயை சம்பளமாக வாங்குகிறார். இப்படி விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 8000 முதல் 12000 வரை தினசரி சம்பளமாக வாங்குகின்றனர். பொது மக்களை பொருத்தவரை இது சிலருக்கு மாத சம்பளமாக இருப்பதால் இந்த செய்தி சிலருக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.