பிரியங்காவின் சிரிப்பில் கொட்டிக்கிடக்கும் கஷ்டங்கள்..! பலருக்கும் தெரியாத கண்ணீர் பக்கங்கள்..!

விஜய் டிவியை பொறுத்தவரை அதில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு தொகுப்பாளர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் டிடி எனப்படும் தேவதர்ஷினி பிரபலமானவராக இருந்தார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் பிரபலமாக இருந்தார்.

தற்சமயம் மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இவர்கள் இருவரும்தான் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றனர். ஒரு தொகுப்பாளினாக வேண்டும் என்பது விஜே பிரியங்காவின் வெகுநாளைய கனவாக இருந்தது.

அந்த கனவு நிறைவேறும் ஒரு இடமாக விஜய் டிவி இருந்தது. அதனையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பிரியங்காவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவர் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

காதல் திருமணம்:

எப்போதும் அவரிடம் புகைப்படம் வெளியிட்டு வரும் பிரியங்கா கடந்த சில வருடங்களாக அவருடன் எந்த ஒரு புகைப்படமும் வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே திருமண உறவு எப்படி இருக்கிறது என்பதுதான் அதிகமான மக்களின் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் பிரவீனும் பிரியங்காவும் நண்பர்களாகதான் பழகி வந்தார்கள்.

ஆனால் பிறகு அவர்கள் நட்பு காதலாக மாறியது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை நன்றாகதான் இருந்தது. அதனை தொடர்ந்து பிரியங்கா அவரது துறையில் நல்ல வளர்ச்சியை பெற துவங்கினார்.

கருத்து வேறுபாட்டால் வந்த பிரச்சனை:

அந்த சமயத்தில்தான் பிரியங்காவிற்கும் பிரவீனிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. முதலில் சின்ன சின்ன பிரச்சனைகள்தான் அவர்களுக்குள் ஏற்பட்டது பிறகு அது பெரிய பிரச்சினையாக மாறி அவர்கள் இருவரும் பேசுவதையே நிறுத்திக் கொண்டனர்.

இந்த சமயத்தில்தான் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொழில்நுட்பத் துறையில் பிரவீன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரியங்கா பிரவீனுடன் வாழ்வதற்கு தயாராக இருந்தாலும் பிரவீன்தான் தற்சமயம் பிரியங்காவுடன் வாழ சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார் என்று பயில்வான் கூறுகிறார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் விவாகரத்து ஆகிவிட்டதா அல்லது மறுமணம் செய்யப் போகிறாரா விஜே பிரியங்கா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version