உனக்கு 44 எனக்கு 36 – விஜய் டிவியில் நடக்கும் கண்றாவி கூத்து…!

திரைப்படங்களில் மட்டுமே அரங்கேறி வந்த கண்றாவதி கூத்து தற்போது சின்னத்திரைகளையும் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது. தென்னிந்தியாவில் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யும் மிகச்சிறந்த மீடியா எது? என்று கேட்டால் அனைவரும் விஜய் டிவிக்கு தான் ஓட்டு போடுவார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி பல புதிய ஷோக்கள் மட்டுமல்லாமல், சீரியல்களையும் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் சிம்மாசனத்தை போட்டு அமர்ந்துள்ளது. இந்த டிவியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தான் அந்த கேலிக்கூத்து நடந்துள்ளது.

மேலும் இந்த சீரியலில் ஏற்கனவே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த தீபக் நடித்துக் கொண்டிருக்கிறார். இது வேறு எந்த சீரியலும் அல்ல. மக்கள் விரும்பி பார்க்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தான்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் தீபக்கின் வயது 45. ஆனால் இந்த சீரியலில் கோதை கேரக்டரில் தமிழில் அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது வெறும் 36 தான்.

அந்த வகையில் தன்னைவிட எட்டு வயது குறைவாக இருக்கும் நடிகையை, சீரியலில் தீபக் நெஞ்சும், கொடலும் அஞ்சாமல் வாய் கூசாமல் அம்மா என்று கூப்பிட வேண்டியுள்ளது.

மீரா கிருஷ்ணனை பொறுத்த வரை “மார்க்கம்” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து வந்த இவரின் கணவரும் சினிமாவில் நடன ஆசிரியராக விளங்குகிறார்.

இப்போது சின்ன திரைகளில் அதிக அளவு வாய்ப்புகள் மீராவிற்கு வந்து சேர்ந்து உள்ளது. இதனை அடுத்து பொக்கிஷம், நாயகி, வந்தால் ஸ்ரீதேவி, சித்தி 2 சீரியல்களில் அம்மாவாக நடித்தார்.

தனக்கு வயது கம்மி என்றாலும் மூத்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதை பற்றி கவலைப்படாத இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தன்னை விட வயது அதிகமான தீபக்-க்கு அம்மாவாக நடிக்கின்ற கேலிக்கூத்தைப் பற்றித் தான் தற்போது அனைவரும் பேசி வருகிறார்கள்.

இது பத்தாது என்று முத்தி போன கத்திரிக்காய்க்கு இரண்டாவது கதாநாயகியாக மேக்னா கதா பாத்திரத்தை அடிஷனலாக இணைத்து இருக்கிறார்கள்.

இது போன்ற கேலிக்கூத்து அக்கட தேசத்தில் நடிகரான பாலையா படத்தில் மட்டுமே இருந்து வந்தது. தற்போது சின்னத்திரையிலும் நுழைந்து விட்டது. இவற்றையெல்லாம் சீரியலில் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது என்று ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இது போன்ற அம்மா கேரக்டர்களை செய்ய சற்றும் தயக்கம் காட்டாமல் இருக்கும் மீரா வெள்ளித்திரையில் அம்மா கேரக்டரை செய்யும் சரண்யா பொன்வண்ணனை போல சின்னத்திரையில் அம்மா கேரக்டரை சிறப்பாக செய்து வருகிறார் என கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam