நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில்தான் நடிக்க இருப்பதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
விஜய்
விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்கள் நலத்திட்டப் பணிகளை துவக்கி விட்டார். கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்கினார்.
இதில் முதல் பரிசாக, ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் என ஏகப்பட்ட பரிசுகளை அள்ளி வழங்கினார். அத்துடன் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார்.
தென் மாவட்டங்களில் …
இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பாதித்த மக்களுக்கு திருநெல்வேலிக்கு விஜய் நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதே போல் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: இதனால தான் கருங்காலி மாலை அணிகிறேன்.. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
இப்படி தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் ஈடுபாடு காட்டிய விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தனது அரசியல் வருகையை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
50 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள்
விஜய் அரசியல் வருகையை தொடர்ந்து, செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதில் 50 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்தது தமிழ்நாடு அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் சிஏஏ சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விஜய் கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, விஜய் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை…
டிவிகே தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நாளை எழுத உள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: கிளாமருக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா இது… என்னமா இதெல்லாம்..!
இப்போ தும்முனா தான்…
நடிகர் விஜய் ஆரம்பத்தில் இருந்தே, டீன் ஏஜ் வயதினர் ஓட்டுகளை குறிவைத்து வருகிறார். அதனால், இப்போ தும்முனா தான் சரியா இருக்கும் என்று, நெருங்கும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து 10ம் வகுப்பு தேர்வு எழுதுவோருக்கு த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்— TVK Vijay (@tvkvijayhq) March 25, 2024