தளபதி விஜய் வாரிசு பட இசை வெளியீட்டு விழா டிக்கெட் இவ்வளவு விலையா? வாயைப் பிளந்த ரசிகைகள்… வெடித்தது சர்ச்சை…!!

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வரும் புத்தாண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் படம் தான் வாரிசு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மேலும் பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடிக்க இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்திருக்கிறார். இந்த படத்தில் குஷ்பூ, சங்கீதா, சியாம், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏறக்குறைய எல்லாம் முடிந்து விட்ட நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கூட சில நாட்களுக்கு முன் லீகானது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

 இதனை அடுத்து இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்று கூறி இருக்கிறார்கள்.

 இந்த விழாவில் தளபதி விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு என்று அவர்கள் ரசிகர்கள் அதிக அளவு கூடுவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணத்தினால் கட்டுப்பாட்டுகள் அதிகம் இருந்த சூழ்நிலையில் எந்த ஒரு விழாக்களும் பிரம்மாண்டமாக நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது.

எனவே தற்போது இந்த விழாவை பிரம்மாண்டமாக நடக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகள் ரசிகர் மன்றம், பத்திரிக்கையாளர் படக் குழுவினர் ஆகியோருக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு  விழாவில் கலந்துகொள்ள ஒரு நபருக்கு 4000 ரூபாய் என்று டிக்கெட்டுகள் விற்கப்படும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஒரு நபருக்கு ஒரு டிக்கெட்டுக்கு 4000 என்பது மிக அதிகம் என்று பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருவதால் தற்போது இணையத்தில் இது ஒரு மிகப்பெரிய அலையை ஏற்படுத்தி விட்டது.

தற்போது எழுந்துள்ள இந்த நெகட்டிவ் கருத்துக்களை கருத்தில் கொண்டு இவர்கள் டிக்கெட்டின் விலையை குறைப்பார்களா அல்லது இதே விலையில் விற்பார்களா என்பது விழா நடக்கும் போது தெரியவரும்.

 இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  நாளை  அதாவது டிசம்பர் 24ஆம் தேதி மாலை நாலு மணிக்கு சென்னையில் இருக்கின்ற நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று பட குழு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version