தற்போது வம்சி இயக்கிய வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படப்பிடிக்கப்பட்ட இந்த படமானது வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் தெலுங்கு திரையரங்குகளில் அதிக அளவு இடங்களை ஒதுக்க முடியாது என்று தெலுங்கு திரை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்க கூடிய அறிவிப்பால் அங்கு விஜய்யின் படம் வெளியாகுமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் தெலுங்கில் வெளிவரக்கூடிய நேரடி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க முடியும் என்றும் விஜய்யின் வாரிசு திரைப்படமானது டப்பிங் படம் என்பதால் குறைந்த அளவு தியேட்டர்களில் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருப்பது கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து இந்த அறிவிப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சந்தானம், இயக்குனர் லிங்குசாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.
இதனை அடுத்து இந்த பிரச்சனையை குறித்து நடிகரும் எம்எல்ஏவும் ஆன ரெட் ஜெய்ண்ட் மூவி நிறுவன தலைவரான உதயநிதி முதன் முதலில் பேசியிருக்கிறார்.
இவர் இந்த பேச்சை இவர் கட்டா குஸ்தி படத்தின் டிராய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது பேசி இருக்கிறார்.
இதை எடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் எப்படி தெலுங்கு திரையுலகில் போய் பேச முடியும் என்று நான் நசுக்காக கூறி ஒதுங்கி விட்டார் என்று கூறலாம். எனவே விஜய்யின் படம் எப்படி வெற்றி பெறும் என்பது சற்று சந்தேகமாக தான் உள்ளது.
இதை எடுத்து இந்த பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படுமா என்பது தெரியாமல் படக்குழுவினர் விழித்து வருகிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் மனது வைத்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற சூழலில் இதை எப்படி அவர்கள் சரி செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.