தளபதி விஜய்யின் வாரிசோடு… ஒரு கை பார்த்து விடலாம் என தல அஜித் துணிவோடு ரிலீஸ் தேதியை வெளியிட்ட உதயநிதி…!

தளபதி விஜய் படமும் தல அஜித் படமும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு  பொங்கலன்று ரிலீஸ் ஆகி மோதின. இதில் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படம்  ஜனவரி 10ஆம் தேதி ரிலீசானது இந்த இரண்டு படங்களுமே குடும்பப் பின்னணியை கதைக்களமாகக் கொண்டிருந்தது.

 இது போலவே தற்போது விஜய்க்கு வாரிசு 66-வது படம் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது . இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

 பீஸ்ட் படத்தின் தோல்வியை அடுத்து இந்த படத்தை மிகவும் அதிகமாக எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் எந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

 இது போலவே அஜித்தின் துணிவு 61 படம் 61வது படமாகும். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த இயக்குனருடன் கூட்டணி அமைத்து இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது முழுமையாக ஒரு ஆக்ஷன் படமாகவே வெளிவர உள்ளது.

 மேலும் இரண்டு படங்களுமே ஒரே நேரத்தில் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியதிலிருந்து சினிமா வட்டாரமே இதன் ரிலீஸ் செய்தியை எதிர்பார்த்து காத்திருந்தது. வாரிசு ரிலீஸ் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இன்று துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவித்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து வலைத்தளங்களில் வாரிசு வெர்சஸ் துணிவு பொங்கல் என்ற செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது.இந்த படங்கள் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களை உள்ள நிலையில் இனி இந்த படங்கள் பற்றிய நிறைய அப்டேட்டுகளை எதிர்பார்ப்பதோடு ப்ரோமோஷன் வேலைகளும் எப்படி உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

விரைவில் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பொங்கல் முடிந்து நமக்கு தெரிய வரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …