THE GOAT படத்தை பார்த்த நடிகர் சொன்ன முதல் விமர்சனம்..!

கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் தான் இருந்து வந்தார். ஆனால் அதற்கு பிறகு குறைந்த வருடங்களிலேயே அதிக வரவேற்பு பெற்று தற்சமயம் தமிழிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய் இருந்து வருகிறார்.

தற்சமயம் இவர் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு 250 கோடி சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

அதிக வரவேற்பு:

 விஜய் நடிக்கும் படங்களுக்கு முன்பை விடவும் நிறைய வரவேற்புகள் இருந்து வருகிறது. ஏனெனில் நடிகர் விஜய் அடுத்து மொத்தமே இரண்டு திரைப்படங்களில்தான் நடிக்க போகிறார் என்பதால் அந்த இரண்டு திரைப்படங்களுமே கண்டிப்பாக பெரும் வெற்றியை கொடுக்கும் படங்களாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படம், அவர் ஏற்கனவே மாநாடு திரைப்படம் போலவே சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. நிறைய ஹாலிவுட் திரைப்படங்களின் பெயர்களை கூறி அந்த படத்தின் ரீமேக்தான் கோட் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தாலும் அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்று வெங்கட் பிரபு தெளிவாக கூறியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று விஜய் இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் டைம் ட்ராவல் கதை அமைப்பை கொண்ட திரைப்படம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு முன்பு விஜய் இந்த மாதிரியான கதைகளத்தில் நடித்ததில்லை என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

முதல் பாதி முடிந்தது:

இந்த நிலையில் கோர்ட் திரைப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அவற்றை விஜய்க்கு போட்டு காட்டி இருக்கின்றனர் படக் குழுவினர். அதனை பார்த்த விஜய் வெங்கட் பிரபுவை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

 

படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களையும் அவர் பாராட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் பாதியை இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பெறும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதற்கு முன்பு அவர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தையும் இப்படித்தான் படத்தை பார்த்துவிட்டு இது கண்டிப்பாக சக்ஸஸ் ஆகும் என்று விஜய் கூறினார். அதே போலவே அந்த படம் வெளியான பிறகு பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் பட குழு இரண்டாம் பாதியை இன்னும் சிறப்பாக இயக்க வேண்டும் என்கிற வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version