தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து திரைப்படத்திற்கு பை, பை சொல்ல உள்ள நிலையில் அரசியலில் களம் இறங்கப் போகிறார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
இதையும் படிங்க: BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?
எனினும் சமீப காலமாக நடிகர் விஜய் தன் குடும்பத்தாருடன் இணக்கமாக இல்லை. பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது போன்ற விஷயங்கள் அடிக்கடி இணையங்களில் பரவி விஜய் ரசிகர்களை சோகத்தில் மிதக்க விட்டது.
தளபதி விஜய்..
தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அதிரடியை காட்டி வரக்கூடிய தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியை மெர்சலாக செய்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் இவருக்கு சரியான வெற்றியை தர அது போதும் அடுத்தடுத்து கடுமையான உழைப்பால் இன்று உச்சகட்ட நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் விஜய் 1999-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் சஞ்சய் மற்றும் திவ்யா என்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மகன் சஞ்சய் தனது தாத்தாவை போலவே இயக்குனராக மாற இருக்கின்ற விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
மேலும் சமீப காலமாக விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் லண்டனில் தனித்து வசித்து வருவதாகவும் அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அந்த கிசுகிசுப்பு உண்மை அல்ல என்று உணர்த்தக் கூடிய வகையில் தற்போது ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது.
பொது வெளியில் விஜயின் மனைவி..
இதற்குக் காரணம் விஜயின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு மற்றும் முக்கிய நிகழ்வுகளில் விஜயோடு அவரது மனைவி கலந்து கொள்ளாததை அடுத்து இந்த கிசு கிசுக்கள் வைரலாக இணையங்களில் பரவியது.
அடுத்து எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கவில்லை என்ற காரணத்தால் கூட இது போன்ற வதந்திகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்பட்ட வேளையில் தற்போது நடந்திருக்கும் விஷயம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் உள்ளது.
இதற்குக் காரணம் நேற்று நடந்த இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் கழித்து அவர் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளி வந்துள்ளது.
எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
இதனை அடுத்து சங்கீதா வந்திருக்காங்க.. ஏன் விஜய் அண்ணா வரவே இல்ல. அன்னியோடு எப்ப தான் ஒன்னா சேர்ந்து வருவாங்க.. என்ற புலம்பல்கள் பெருமளவு இணையங்களில் வியாபித்து உள்ளது.
எனினும் வெளிநாட்டில் கோட் படப்பிடிப்பில் விஜய் இருப்பதால் தான் இந்த திருமணத்திற்கு வரவில்லை என்று தெரிய வந்துள்ளது.இதை அடுத்து சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்ப்பதோடு நின்று விடாமல் அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அவர்கள் இருவரும் சேர்ந்து தான் இருக்கிறார்கள் என்பதற்கு இதை உதாரணமாக நாம் சொல்லலாம். என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.