“இது ரெண்டும் ஒன்னா உங்களுக்கு…” – சாய் பல்லவியை விளாசிய நடிகை விஜயசாந்தி..!

பிரபல நடிகை சாய் பல்லவி சமீபத்தில் ஒரு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரிடம் மதம் தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டன.

பொதுவாக சினிமா நடிகைகள் இப்படியான கேள்விகளை தவிர்த்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால், நடிகை சாய் பல்லவி நிதானமாக நின்று பதிலளித்தார்.

அவர் கூறியதாவது, காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும் பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இறைச்சி விற்ற இஸ்லாமியர்களை கொள்வதும் மத வன்முறை தான்.. இரண்டும் ஒன்று தான் என்று கூறியிருந்தார்.

இவரது இந்த கருத்துக்கு மத உணர்வாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது இவரது கருத்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி சாய்பல்லவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாய்பல்லவி யின் இந்த துணிச்சலான கருத்தை வரவேற்று இவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் சாய்பல்லவி ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல நடிகை விஜயசாந்தி சாய்பல்லவி இந்த கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். நடிகை சாய் பல்லவி விபரம் புரியாமல் பேசுகின்றார். அவர் கூறிய கருத்தை ஒரு நிமிடம் நின்று நிதானித்து பின்னால் திரும்பிப் பார்த்தால் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியவரும்.

ஒரு தாய் தனது மகனை அடித்துக் கண்டிப்பதும் ஒரு போலீஸ் திருடனை அடித்து கண்டிப்பதும் ஒன்றாகிவிடுமா..? இதுபோன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களில் விவரம் தெரியாமல் தான்தோன்றித்தனமாக கருத்து கூறுவதற்கு முன்பு ஒன்றுக்கு பல முறை சிந்தித்து சரியாகத்தான் கூறுகிறோம் என்று யோசித்து செய்ய வேண்டும் சொல்ல வேண்டும்.

ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் பிரமோஷன் மட்டும் செய்யாமல் இதுபோன்ற சென்சிட்டிவான விஷயங்களை பேசுவதன் மூலம் அந்த படத்திற்கு பிரமோஷன் வேலைகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபடுவது நாட்டின் அமைதி கெட்டாலும் பரவாயில்லை என்னுடைய படம் நல்ல வசூலை பெற வேண்டும் என்ற எண்ணம்.

இப்படியான எண்ணம் இந்த தேசத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று கடுமையாக சாடியுள்ளார் விஜயசாந்தி

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …