ரஜினி மருத்துவமனையில் இருந்த போது.. விஜயகாந்த் பேசியது இது தான்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. மெல்ல மெல்ல இந்த துயரமான சம்பவத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டும் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் விட்டு அழுதார். நண்பர் கேப்டன் விஜயாகாந்த்.. நடிகர் என்பது தாண்டி நல்ல மனிதர்.. இவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் எப்படி இருந்தது என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஒரு மிகப்பெரிய தலைவனை.. ஒரு நல்ல மனிதனை.. ஒரு நல்ல நண்பனை இழந்திருக்கிறேன்.. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கண்ணீர் விட்டு பேசி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது நடிகர் விஜயகாந்த் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது, நான் நண்பர் ரஜினிகாந்த் அவர்களை பார்க்க வந்திருந்தேன், மருத்துவர் தணிகாச்சலம் அவர்களிடம் அவருடைய உடல் நிலையை குறித்து கேட்டறிந்தேன்., அவரை சந்திக்க அனுமதி கேட்டேன்.

ஆனால் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் வேண்டுமானால் எழுப்பலாமா என்று கேட்டனர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் நாம் தொந்தரவு செய்வது நன்றாக இருக்காது.

அதனால் நாளை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி வந்து விட்டேன். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார் என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார். விரைவில் அவர் வீட்டிற்கு திரும்புவார் என்று பேசி இருந்தார் கேப்டன் விஜயகாந்த்.

தொடர்ந்து பேசிய அவர், இது ஒரு தனிப்பட்ட நபரின் உடல்நிலை சார்ந்த விஷயம்.. நாங்கள் நடிகர்கள்.. என்பதெல்லாம் தாண்டி நாங்களும் உங்களை போல மனிதர்கள் தான்.. உங்களைப் போல எங்களுக்கும் உடல் நல பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டுதான் இருக்கிறோம்.. இதனை ஒரு செய்தியாக பார்க்க வேண்டுமா…? என்ற கேள்வி இருக்கிறது. அப்படியே பார்த்தாலும் 20 பத்திரிக்கையாளர்கள் வந்திருக்கிறீர்கள்…! யாராவது ஒருத்தர் வந்து இந்த விஷயத்தை சேகரித்து சென்றார் போதாதா..?

எதற்காக ஒரு சிறிய விஷயத்தை இத்தனை பத்திரிகை நிருபர்கள் வந்து பெரிது படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இனிமேல் இது போன்ற விஷயங்களுக்கு யாராவது ஒருவர் மீடியா சார்பில் இருந்து வந்தால் போதுமானது.

இப்படி ஒட்டுமொத்தமாக வந்து ஒரு விஷயத்தை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நான் என்னுடைய கருத்தை சொல்லிவிட்டேன். இதன் பிறகு முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது.

நீங்களே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் எதற்கு இவ்வளவு சிறிய ஒரு விஷயத்துக்கு எத்தனை பேர் வந்து ஒரு பரபரப்பை கிளப்ப வேண்டும். இது ஒரு தேவையில்லாத அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க வழி வகுக்கும்.

எனவே தனிப்பட்ட மனிதனின் பிரச்சனைகளின் போது இப்படி கூட்டமாக வருவதை தவிர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இவருடைய இந்த பேச்சு குறித்து உங்களுடைய கருத்து என்ன கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam