கோவத்தின் உச்சத்தில் விஜய்.. சம்பவம் செய்த பிரேமலதா.. விஜயகாந்த் DeepFake இருக்கா..? இல்லையா..?

அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார். அந்த படமானது 30 சதவீதம் முடிந்த நிலையில் எம்.ஜி.ஆர் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க எம்ஜிஆர் – யை அணுகிய போது தான் முதல்வரானால் இனி நடிக்க முடியாது என்பது போல சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து எம்ஜிஆரின் கலை வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் அந்த படத்தை எடுத்து ட்ரிக் ஷார்ட் கொண்டு எம் ஜி ஆர் ஐ வைத்து படத்தை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.

கோபத்தின் உச்சத்தில் விஜய்..

இதனை எதற்காக செய்யாறு பாலு கூறினார் என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். இதற்கு காரணம் பிரேமலதா அண்மையில் ஒரு அறிக்கையில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தனது கணவரும் கட்சித் தலைவரும் ஆகிய விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த படத்தில் பயன்படுத்தக் கூடாது.

மேலும் அது நிமித்தமாக அப்படி செய்ய யாரும் எங்களிடம் இதுவரை எந்தவித அனுமதியும் கேட்கவில்லை என்று சொல்லியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இதற்கு காரணம் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் இருப்பது போல சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

டைம் ட்ராவலர் திரைப்படம் என்பதால் அதை விஜயகாந்த் வருவது போல ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்து இருக்கிறார்கள்.

எனினும் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே சொன்னது போல் தன்னிடம் யாரும் இதற்காக பர்மிஷன் கேட்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சம்பவம் செய்த பிரேமலதா..

இந்த சூழ்நிலையில் விஜய் ஆண்டனி படம் ஒன்றில் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை கொண்டு வர இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் இதற்காக விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பிரேமலதாவை அணுகி அவரை வைத்து படம் பிடிக்க அனுமதி கேட்டு இருக்கிறார்கள்.

ஆனால் சூழ்நிலையை சற்று விளக்கி கூறிய பிரேமலதா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. புதிதாக படம் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் விஜயகாந்தை பயன்படுத்த போவதாக சொல்லி வருகிறார்கள் இது தான் பிரேமலதாவிற்கு கோபம் ஏற்பட காரணம்.

மேலும் இப்படி படங்களில் விஜயகாந்த் பயன்படுத்துவதன் மூலம் ஒரு அற்புதமான தலைவரை கேலிச்சித்திரமாக மாற்றி விடுவார்களோ என்ற பயம் பிரேமலதாவிற்கு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் DeepFake இருக்கா? இல்லையா?

இதை அடுத்து கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் படம் இருக்கிறதா? அப்படி இருந்தால் இவர்கள் பிரேமலதாவிடம் அனுமதி வாங்கி இருக்கிறார்களா? இல்லையென்றால் அது போன்ற காட்சிகள் நீக்கப்படுமா என்று பலவிதமான சந்தேகங்களை செய்யாறு பாலு கிளப்பி இருக்கிறார்.

செந்தூரப் பாண்டி திரைப்படத்தின் மூலம் பெயரை பெற தளபதி விஜய்க்கு உற்ற துணையாக இருந்தவர் விஜயகாந்த் என சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு இடையில் தளபதி விஜய் கட்சி ஆரம்பித்த உடன் எங்கே தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று எண்ணம் எல்லா தரப்பு கட்சி தலைவர்களிடம் இருந்தது.

மேலும் தற்போது கோட் படத்தில் விஜயகாந்த் நடிப்பது போல் இருக்கும் காட்சிகளுக்கு பணம் பெற்று இருக்கிறார்கள் என்றும் பெற்ற பணம் போதாது என்று மேலும் டிமாண்ட் செய்வதாக கருத்துக்கள் ஒரு பக்கம் கசிந்து வருகிறது.

மேலும் விஜய் விஜய் காந்தை பெருமைப்படுத்தக் கூடிய வகையில் தான் கோட் படத்தில் பயன்படுத்துவார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்காது என்று உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version