நடிகர் சங்கத்திற்காக கேப்டன் செய்த சம்பவம்.. ஆனால், இறுதி சடங்கில் நடிகர் சங்கம் செய்த துரோகம்..!

ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவர் அருமை தெரியாது என்று கூறுவார்கள். அது போல கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது தெரியாத பல விஷயங்கள் அவர் மரணத்திற்கு பின்பு அடுக்கடுக்காக வெளி வந்து அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை அனைவருக்கும் உணர்த்திவிட்டது.

கேப்டனை பற்றி அனைவரும் உள்ளதை உள்ளபடி பேசி வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாமானியன் வரை நல்ல பெயரை பெற்ற மாமனிதனாய் கேப்டன் என்று விளங்குகிறார். சினிமா துறையில் கேப்டனாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் குறுகிய காலத்தில் அதிரடி வெற்றியை பெற்றவர் கேப்டன்.

எம்ஜிஆர் காலத்தில் நடிகர் சங்க கடனை கட்ட முடியாமல் திணறினார்கள். அதனை அடுத்து இந்த கருப்பு எம்.ஜி.ஆர் தான் நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். குறிப்பாக வெளிநாடுகளில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் திரை நட்சத்திரங்களை வைத்து இவர் நடத்திய கலை நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட பணத்தில் கடனை அடைத்துவிட்டார்.

அப்படி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் போது அந்த நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்த நபர் ஒருவர் நடிகர் சங்கத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்ய முயற்சி செய்ததை அடுத்து நேர்மையான வழியில் விஜயகாந்த் அந்த நபரிடம் பேச அவர் திமிராக தர முடியாது என்று பேசி விட்டார்.

இதனை அடுத்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த் அந்த நபரின் கழுத்தைப் பிடித்து தூக்கி சுவரோடு சேர்த்து பிடித்ததை நேரில் பார்த்த தயாரிப்பாளர் டி. சிவா, அதனை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தைரியத்தோடு அந்த நபரை அது போல செய்ததின் மூலம் தான் பணத்தை பெற முடிந்தது என்று கூறியதோடு, நியாயத்திற்காக தைரியத்தோடு போராடக் கூடிய குணம் படைத்த சத்ரியன் விஜயகாந்த் என கூறினார்.

இப்படிப்பட்ட விஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் சங்கம் என்ன கிழித்தது. கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த போது நடிகர் சங்கத்திற்காக வெளிநாட்டில் எப்படிப்பட்ட சம்பவத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது உங்களுக்குப் தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும்.

ஆனால் அவருடைய இறுதி சடங்கில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு மலர் வளையம் கூட கொண்டு வந்து வைக்காமல் துரோகம் செய்திருப்பதை நினைக்கையில் நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைக்கையில்..

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam