டிசம்பர் மாசம் வந்து விட்டாலே டேஞ்சரான மாதமாக தற்போது மாறிவிட்டது. இயற்கை சீற்றங்கள் மட்டுமல்லாமல் மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் இறப்புகள் நடக்கும் மாதமாக மாறிவிட்டது. அந்த வகையில் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் மிகச்சிறந்த நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் கைதேர்ந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார்.
கருப்பு எம்ஜிஆர் என்று மக்களால் அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு உரிய மரியாதையை அளித்து சிறப்பித்தார்கள்.
இந்து மத ஐதீகப்படி மார்கழி மாதத்தில் இறந்தவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தற்போது விஜயகாந்த் என முக்கிய அரசியல் மனிதநேயம் மிக்க மனிதர்கள் இறந்து நேரடியாக சொர்க்கத்துக்கே சென்று விட்டார்கள் என கூறலாம்.
இந்நிலையில் விஜயகாந்த் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது கருட பகவான் வலம் வந்ததை அனைவரும் பார்த்து இருக்கலாம். இப்படி கருடன் வட்டம் விட்டதற்கு காரணம் என்ன? இதனால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே கருடனை பெருமாளின் அம்சமாகவே பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெருமாளை சுமந்து செல்லும் கருடன் விஜயகாந்தியின் இறுதி ஊர்வலத்தில் வட்டமிட்டது அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்கு தான் என்று பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த கலியுகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது என்றும் மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவாக இருப்பதாலும் அதிக அளவு அன்னதானமும் செய்திருப்பதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை கூறுகிறார்.
மேலும் ஆரம்ப காலத்தில் இருந்தே குன்றத்தூர் முருகன் மீது அதீத பக்தி கொண்டிருந்த காரணத்தால் தான் அவர் செல்வாக்கோடு திகழ்ந்திருக்கிறார். அத்தோடு சொல் வாக்கும் கொண்டவர்.
உச்சகட்ட நட்சத்திரமாக திரையுலகில் ஜொலித்திருந்தாலும் அவர் தனது குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் விட்டு தராமல் ஒவ்வொரு முறையும் செய்ததினால் தான் இந்த அளவு வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
இது வரை எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்காத சிறப்பம்சம் இவருக்கு கிடைத்து உள்ளது. கிராமத்தில் இருந்து கேப்டன் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த சென்னையில் நோக்கி வந்தது மக்களுக்கும், இவருக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருந்தது.
அரசியல்வாதிகள் கூட அதிக அளவு வந்திருந்தார்கள். எனினும் திரைப்பட சங்கத்தை சார்ந்தவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்ததே என்பது சற்று வருத்தமான விஷயமாகத்தான் இருந்தது.
பலரையும் வாழ வைத்து திரை உலகில் ஜொலிக்க வைத்து அழகு பார்த்த நடிகர்கள் கூட விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கூட சிலர் கலந்து கொள்ள வரவில்லை.
சரி, நடந்து முடிந்ததை பேசி இனி பிரயோஜனம் இல்லை. ஆனால் நிச்சயமாக வைகுண்ட பிராப்தியை தான் விஜயகாந்த் கண்டிப்பாக அடைந்திருக்கிறார் என்பதை கருடன் வட்டமிட்ட நிகழ்வின் மூலம் நாம் ஊர்ஜிதப்படுத்தலாம்.
அது மட்டுமல்லாமல் மண்ணுலகில் தமிழகத்தை ஆள முடியாமல் இருந்திருந்தாலும், மக்கள் மனதை ஆட்சி செய்த விஜயகாந்த் விண்ணுலகில் தன்னுடைய ஆட்சியை செய்வார் என நினைக்கலாம்.