விஜயகாந்த் இறக்கும் முன் கடைசி வார்த்தை.. கேட்டு கதறி அழுத மருத்துவர்..!

நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவருடைய இந்த இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழத்தியிருக்கிறது.

இவர் அரசியலில் ஈடுபடும் பொழுது கேலி பேசியவர்கள் கூட தற்பொழுது இவருடைய இழப்பை நினைத்து கேண்ணீர் சிந்துகின்றனர். இவருடைய இறுதிச் சடங்குக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மறுபக்கம் இவருடைய பூத உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பொது மக்கள் அலையலையாய் வந்து கேப்டனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திரைப்படங்களில் நடிகனாக அறிமுகமான நடிகர் விஜயகாந்த் தன்னுடைய படங்களில் ஊழல் லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியது மட்டும் இல்லாமல் நாட்டிற்கு ஆதரவாகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்து தன்னுடைய தேசப்பற்றையும் காட்டியவர் கேப்டன்.

கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்த பிறகு கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். பல ஆண்டுகள் நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி எதிர்க்கட்சி தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.

அதன் பிறகு சொந்தக் கட்சியில் இருந்த சிலரும் எதிர்க்கட்சியினரும் செய்த சூழ்ச்சியால் வீழ்ந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.

நாளுக்கு நாள் அவருடைய உடல் உறுப்புகள் செயல் இழந்து நேற்று மரணம் அடைந்தார். இந்நிலையில், அவர் மரணிக்கும் முன்பு மருத்துவரிடம் கூறிய வார்த்தை என்ன என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நன்றாக சுவாசித்து கொண்டிருந்த விஜயகாந்த் திடீரென அதீத வலி காரணமாக மருத்துவரை அழைத்து மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது என்று சைகை மூலம் பேசியிருக்கிறார். இதனை கேட்டு கண் கலங்கியுள்ளார் மருத்துவர். அதன் பிறகு உடனடியாக அவர் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்.

வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் இயற்கையாக சுவாசிக்க தொடங்க வேண்டும். ஆனால் கேப்டன் விஜயகாந்த் இயற்கையாக சுவாசிப்பதில் கடுமையான சிரமங்களை எதிர் கொண்டிருக்கிறார். அதன் பிறகு நேற்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார்.

இது குறித்து பிரேமலதா அவர்கள் கூறியதாவது, அவர் ஏற்கனவே சளி இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்ற எதிர்கொண்டு இருக்கிறார். தற்போது, குளிர் காலம் என்பதால் அவருக்கு சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. கேப்டன் இன்று நம்மை விட்டு மறைந்திருக்கிறார் என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *