விஜயகாந்த் காதலித்த 3 நடிகைகள்..! அட இவங்களுமா..?

தமிழ் சினிமாக்களில் 80களில் கொடி கட்டி பறந்த நடிகராக இருந்து வந்தவர்தான் விஜயகாந்த் 90களில் பிரபல நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்த விஜயகாந்த் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

பார்ப்பதற்கு கிராம பாங்கான தோற்றம், கட்டுமஸ்தான உடல், கருப்பு அழகு என ஹீரோவுக்கு ஏற்ற பந்தாவே இல்லை.

ஆனாலும் அவர் தன்னுடைய நடிப்பு மற்றும் டயலாக் டெலிவிரி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார்.

நடிகர் விஜயகாந்த்:

குறிப்பாக இவரது படங்களில் சமூக நலன் சார்ந்த கருத்துக்களை டயலாக் ஆக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகராகவே இவர் தென்பட்டு வந்தார்.

போலீஸ் அதிகாரி, ஆர்மி ஆபிஸர் மற்றும் கிராம கிராமங்களில் பெருந்தன்மையான மனிதர் போன்ற கேரக்டரில் நடித்து மிகப் பிரபலமான நடிகராக விஜயகாந்த் வலம் வந்து கொண்டு இருந்தார்.

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயகாந்த் கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

முதன் முதலில் விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 1984 ஆம் ஆண்டு அந்த படம் வெளியாகியது.

முதல் படமே ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், வானத்தைப்போல உள்ளிட்ட திரைப்படங்கள் விஜயகாந்தின் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது.

சிறந்த நடிகருக்காக ஃபிலிம் ஃபேர் விருது , தமிழக அரசு விருது, பத்ம பூசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்று கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

கேப்டன் விஜயகாந்த்:

கேப்டன் பிரபாகரன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் திரைப்படங்களில் பார்ப்பது போன்று நிஜத்திலும் மக்களுக்கு நல்ல மனிதராகவே தென்பட்டு வந்தார்.

பல பேருக்கு உணவுகள் வழங்கி அவர்களுக்கு பசி ஆற்ற வைப்பதில் வல்லவர். விஜயகாந்த்திடம் தேவை என போய் நின்றால் என்ன உதவியானாலும் அவர் செய்து விடுவார் என அவரிடம் நடித்த சக நடிகர்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே அவர் உடல்நலம் உடல் நலம் நலிவுற்று சிகிச்சை பலனில்லாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மரணித்து விட்டார்.

அவரது மரணம் சரித்திரம் பேசும்படியாக அமைந்தது. பலகோடி ரசிகர்கள் ஒன்றுகூடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனிடையே விஜயகாந்தின் திருமண வாழ்க்கை என எடுத்துக்கொண்டோமானால் விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன்னர் விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்கும் போது மூன்று நடிகைகளுடன் காதலில் இருந்து வந்துள்ளார்.

அது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது. அந்த எந்தெந்த நடிகை என்று பார்க்கலாம்.

“நீரோட்டம்” படத்தில் பத்மபிரியா:

நீரோட்டம் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகையான பத்மபிரியாவை விஜயகாந்த் காதலித்து வந்தார்.

விஜயகாந்த் பத்மபிரியாவுக்காக சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காலம் மட்டும்தான் இவர்களது காதல் நிலை தெரிந்தது அதன் பின்னர் “தூரத்து இடி முழக்கம்” படத்தில் நடித்த பூர்ணிமாவை காதலிக்க துவங்கிவிட்டார் விஜயகாந்த் .இதனால் பத்மப்பிரியா அவரது வாழ்க்கையில் காணாமல் போய்விட்டார்.

“தூரத்து இடி முழக்கம்” படத்தில் பூர்ணிமா:

விஜயகாந்த் பூர்ணிமாவுக்காக பெரிய பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்தது மட்டுமில்லாமல் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றியம் வைத்து கொடுத்தார்.

அதை பொத்தி பொத்தி பத்திரமாக பாதுகாத்து வந்த பூர்ணிமா பின்னர் ராதிகா விஜயகாந்த் வாழ்க்கையில் வந்ததால் அவரது காதலும் காணாமல் போய்விட்டது.

“தெற்கத்தி கள்ளன்” படத்தில் ராதிகா:

ராதிகா விஜயகாந்த் வாழ்க்கையில் வந்த பிறகு விஜயகாந்த் மிகச்சிறந்த நடிகராக மாற்ற பல உதவிகளை விஜயகாந்த் வந்தாராம்.

அவரது நடை ,உடை, பாவனை ,ஸ்டைல் என அனைத்தையும் கற்றுக் கொடுத்ததே ராதிகா தான் என பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் மிகச் சிறந்த காதலர்களாக பார்க்கப்பட்டு வந்தார்கள். ஆனாலும் விஜயகாந்த் வீட்டார் ராதிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவே இல்லை.

காரணம் ராதிகா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதால் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நீ தகுதியற்றவன் கிடையாது.

எனவே ராதிகா போன்ற பெண் நம் வீட்டிற்கு வேண்டாம் எனக் கூறி நிராகரிக்க ராதிகாவையும் பிரிந்துள்ளார் விஜயகாந்த்.

அதன் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பயில்வான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam