விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு காரணம் இவரா..? ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்..!

தமிழ் திரை உலகில் கேப்டன் என்ற அந்தஸ்தை பிடித்த நடிகர் விஜயகாந்த் தனது அற்புத நடிப்பாலும் மக்களுக்கு வாரி தந்த வள்ளலாக வாழ்ந்தவர். இவர் திரைப்படங்களில் பேசும் வசனங்களுக்கு ஏற்றபடி மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளை செய்திருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த் சென்னைக்கு வந்து திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் போது பசியால் வாடும் அனைவருக்கும் தனது ஆபீஸில் மூன்று வேளை உணவை இன்று வரை தொடர்ந்து தந்தவர். கேப்டன் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் செய்த பணிகளை யாரும் எளிதில் மறக்க முடியாது.

நடிகர் விஜயகாந்த்..

தமிழ் திரையில் முன்னணி நடிகராக நடித்த விஜயகாந்த் தன்னை போலவே திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ராதிகாவோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்ற திரைப்படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி படு ஜோராக ஒர்க் அவுட் ஆகியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் ரசிக்கப்பட கூடிய வகையில் ஒவ்வொரு காட்சியும் அமைந்துவிடும்.

அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராதிகா ஆசைப்பட்டதோடு கடைசி வரை அதற்காக போராடிய போதும் விஜயகாந்த் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளாமல் பிரேமலதாவை திருமணம் செய்து கொள்ள காரணம் என்ன என்பது பற்றி செவந்த் சேனல் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசியிருக்கிறார்.

இவர் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளி வந்த கூலி, தளபதி விஜயின் மாண்புமிகு மாணவன், கார்த்தி நடிப்பில் வெளி வந்த சீனு, கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு, வடிவேலு நடிப்பில் வெளி வந்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், மகிழ் திருமேனி இயக்கிய முன் தினம் பார்த்தேனே போன்ற பல படங்களை தயாரித்தவர்.

விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு காரணம்..

சமீபகாலமாக இவரது தயாரிப்பு நிறுவனம் பல கோடிகளை இழந்து விட்டதாக பல பேட்டிகளில்  பேசியிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் படம் ஒன்றை பண்ணுவேன் என்று கேப்டன் விஜயகாந்த் வாக்கு கொடுத்த நிலையில் கடைசி வரை அவர் நடிக்காமலேயே இருந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் ஒரு முறை கேப்டனை சந்தித்த போது படம் பண்றதா இருந்தா சொல்லுங்க பண்ண வில்லை என்றாலும் சொல்லிடுங்க என்னை சும்மா அதற்காக அலைய விடாதீர்கள் என பேசி விட்டேன்.

இதனை அடுத்து இதுபோல தன்னிடம் யாரும் பேசியது இல்லை என தங்கராஜ் என்பவரின் மூலமாக விஜயகாந்த் என்னிடம் கூறினார்.

இதனை அடுத்து தான் விஜயகாந்த் பற்றி நான் முழுமையாக புரிந்து கொண்டேன். அவருடைய நல்ல மனசுக்கு அவர் சிஎம் பதவியை மிஸ் பண்ணியது எனக்கு மிகவும் வருத்தமான விஷயங்களில் ஒன்றாக என்று வரை உள்ளது என தெரிவித்தார்.

ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்..

அது மட்டுமல்லாமல் கேப்டன் ஒரு முறையாவது தமிழகத்தின் சிம்மாக மாறி இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருப்பார். ஆனால் அவர் உடல் நிலை காரணத்தால் அந்த பதவியை பெற முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் நடக்காதது காரணம் பற்றி பேசிய அவர் விஜயகாந்தை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராதிகா பல வகைகளில் முயற்சி செய்தபோது விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் கடைசியாக ஏதேதோ செய்து பிரேமலதாவை திருமணம் செய்துவிட்டார்.

இந்த முடிவு சரியா? தவறா? என்பது எனக்கு தெரியாது ஆனால் விஜயகாந்தின் நல்ல மனசுக்கு அவருக்கு காதல் கை கூடாமல் போனது பற்றி நான் பலமுறை வருத்தப்பட்டு இருப்பதாக பேசியதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்தான் ராதிகாவோடு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ற பகீர் தகவலை தெரிவித்தது ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version