கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதன்படி கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கேப்டன் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்நிலையில்,மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
மூச்சு விடுவதில் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ள கேப்டன் விஜயகாந்த் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார் என்ற தகவல்கள் சற்று முன்பு வெளியாகி இருக்கிறது.
இது தேமுதிக தொண்டர்களையும், ரசிகர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த நாள் இப்படியா விடியணும் என்று தங்களுடைய வேதனையை பதிவு செய்து இருந்தனர். இதனை தேசிய முற்போக்கு திராவிடர் கழகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவி தேமுதிகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டி இருக்கிறது என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டு விரைவில் பூரண நலம் பெற்று திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய வேண்டுதல்களை பதிவு செய்து வருகின்றனர்.