கோடிகளில் சொத்து.. இளம் வயசுலேயே பாட்டி.. சரத்குமாரின் தங்கை.. விஜயகுமாரின் முதல் மகள் பற்றிய ரகசியம்..

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முதலில் ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் நடித்த அவர், பின்னாளில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து அசத்தினார்.

முத்துக்கண்ணு

நடிகர் விஜயகுமார் சினிமாவில் நாயகனாக நடிக்க வரும் முன்பே, அவரது உறவினர் பெண் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்று 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

அடுத்து 1976ல் சினிமாவில் நடித்த காலகட்டத்தில் நடிகை மஞ்சுளாவை காதலித்து, 2வது திருமணம் செய்துக்கொண்டார். இந்த மனைவிக்கு பிறந்த குழந்தைகள்தான் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர்.

மஞ்சுளா

முத்துக்கண்ணு முதல் மனைவி, மஞ்சுளா 2வது மனைவி என இரண்டு பேர், 5 பெண்கள், ஒரு மகன் என 6 வாரிசுகள் விஜயகுமாருக்கு வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், உடல் நல பாதிப்பால் மஞ்சுளா இறந்து விட்டார்.

இதையடுத்து முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் வாழ்ந்து வருகிறார் விஜயகுமார். விஜயகுமாரின் 4 பெண்கள், மகன் அருண்விஜய் என அனைவரும் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என சந்தோஷமாக வாழும் நிலையில், வனிதா விஜயகுமார் மட்டும் தன் மகள் ஜோவிகாவுடன் தனித்து வாழ்ந்து வருகிறார்.
மூத்த மகள்

இதில் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகள் கவிதா தான், வனிதாவை வீட்டுக்குள் சேர்க்க கூடாது. அவள் வந்தால் தேவையற்ற பிரச்னைகளை குடும்பத்துக்குள் ஏற்படுத்துவாள் என ஒதுக்கி வைத்திருக்கிறார் கவிதா.

அமெரிக்காவில் கணவருடன் செட்டிலான டாக்டர் கவிதாவின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மகள், இரண்டு மகன்கள் என்ற நிலையில், மகளுக்கு திருமணமாகி இரண்டு பேத்திகள் இருக்கின்றனர். எப்போதும் பேத்திகளுடன் ஜாலியாக விளையாடுவதுதான் கவிதாவின் பொழுதுபோக்கு.

இதையும் படியுங்கள்: கணவர் செய்த துரோகம்.. போலீஸ் அப்பா.. தீராத நோய்.. கடைசி சத்தியம்.. பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியம்..!

நிறைய பேர் அருண் விஜய், வனிதா, ஸ்ரீதேவி ஆகியோர் தான் சினிமாவில் நடித்துள்ளனர். முத்துக்கண்ணு மகள் கவிதா, அனிதா சினிமாவில் நடிக்கவில்லை என்று நினைக்கின்றனர். ஆனால் அதில் ஒருவர் நடித்திருக்கிறார்.

சரத்குமார் தங்கையாக…

கடந்த 1995ம் ஆண்டில் வெளியான கூலி என்ற படத்தில், சரத்குமார் ஹீரோவாக, மீனா ஹீரோயினாக நடித்திருப்பர். இந்த படத்தில் சரத்குமார் தங்கையாக நடித்தவர் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமார்தான். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதையடுத்து பல படங்களில் நடிக்க கவிதா விஜயகுமாருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார் கவிதா. சினிமாவில் நடித்து 4 பேருக்கு விஜயகுமார் மகள் என தெரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். தெரிந்துவிட்டது. இனி நடிக்க மாட்டேன்.

50 கோடிகளில் சொத்து…

ஒரு படம் போதும். இனி வாழ்க்கையை கவனிக்கணும். படிப்பு முக்கியம் என டாக்டருக்கு படித்த கவிதா, டாக்டரும் ஆனார். சங்கர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.

இதையும் படியுங்கள்:  கணவர் அப்படி… மாமியார் இப்படி.. திருமணதிற்கு பிறகு நடிக்க வந்த Pandian Stores 2 Raji..

அமெரிக்காவில் 50 கோடிகளில் சொத்து.. இந்த வயசுலேயே 2 பேத்திகளுக்கு பாட்டி.. சரத்குமாரின் தங்கையாக நடித்த திருப்தி என விஜயகுமாரின் முதல் மகள் கவிதா பற்றிய பல ரகசியங்கள் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version