நான் செய்த அந்த விஷயத்தை.. பாத்துட்டு அம்மா கதறி கதறி அழுதாங்க.. விஜயலட்சுமி எமோஷனல்..!

டைரக்டர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. காதல் கோட்டை படம் மூலம் மிகப்பெரிய டைரக்டராக அறியப்பட்டவர் டைரக்டர் அகத்தியன். இவரது இயக்கத்தில் காதல் கோட்டை படம், பெரிய ஹிட் அடித்தது.

நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை தேவயானிக்கு மிகப்பெரிய திருப்புனையாக இந்த படம்அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயலட்சுமி

அகத்தியன் மகள் விஜயலட்சுமி சென்னை 28 படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, வனயுத்தம், பிரியாணி, கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருமுறை பங்கேற்றார். டிவி சீரியல்களில் நாயகி மற்றும் டும்டும்டும் போன்ற சீரியல்களில் நடித்தவர்.

 

அம்மாவை பற்றி…

பிரபல நடிகை விஜயலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தன்னுடைய அம்மாவுடன் நினைவு ஒன்றை பகிர்ந்து கொள்ளும்போது அவர் பேசியதாவது,

சிறுவயதில் என்னுடைய அம்மா ஒரு பபுள்கம் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேலை முடிந்து வரும் போது நிறைய பபுள்கம் வாங்கி வருவார். அதனை நாங்கள் சாப்பிட்டு வீட்டில் அங்கும் இங்கும் போட்டு வைத்து விடுவோம். மாலை நேரங்களில் நாங்கள் ஒரே அலங்கோலமாக தான் இருப்போம்.

அலங்கோலமாக ஏன் இருக்கறீர்கள்?

ஒருமுறை என்னுடைய அம்மா என்னிடம் வந்து, மாலை நேரத்தில் எதற்கு இப்படி அலங்கோலமாக இருக்கிறீர்கள். முகம் கழுவி பவுடர் அடித்துக் கொண்டு தலை சீவிக்கொண்டு லட்சணமாக இருந்தால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினார்.

அதை நாங்கள் விளையாட்டாக அப்போது மறந்து விட்டோம். ஆனால் அடுத்த நாள் நிஜமாகவே அம்மா சொன்னது போல முகம் கழுவிக்கொண்டு, முகம் முழுதும் பவுடர் போட்டுக்கொண்டு, தலை சீவிக் கொண்டு, நல்ல ஆடை அணிந்து கொண்டு இருந்தோம்.

பெரிய களேபரம் பண்ணி விட்டோம்

ஆனால், முகம் கழுவுகிறேன் என்ற பெயரில் எங்கள் வீட்டில் ஒரு அண்டாவில் இருந்த தண்ணீர் அனைத்தையும் கலங்க வைத்து விட்டோம். வீடு முழுவதும் பவுடர்களை கொட்டி வைத்து என, பெரிய களேபரம் பண்ணி விட்டோம்.

ஆனால் அன்று மாலை வந்த என்னுடைய அம்மா, எங்களை பார்த்துவிட்டு கதறி கதறி அழுதார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

விளையாட்டாக சொன்னதை…

நேற்று அவர்கள் விளையாட்டாக சொன்ன விஷயத்தை, நாங்கள் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அடுத்த நாள் அப்படியே நாங்கள் முகம் கழுவிக்கொண்டு, அழகாக உடை உடுத்திக்கொண்டு அவர் சொன்னதை செய்து கொண்டிருந்தோம்.

இதனை பார்த்ததும் என் அம்மாவுக்கு அழுகையே வந்துவிட்டது. அப்போது நாங்களும் அழுது விட்டோம் என கலங்கிப் போய் அந்த சம்பவத்தை பற்றி பேசியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

என் அம்மா சொன்னதை கேட்டு நான் செய்திருந்த அலங்காரத்தை பாத்துட்டு அம்மா கதறி கதறி அழுதாங்க என்று விஜயலட்சுமி எமோஷனலாக கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version