தொலைக்காட்சி நடிகரும் குணச்சத்திர நடிகருமான நடிகர் சஞ்சீவ் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் நாடகத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
அந்த தொடரில் இவர் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவர் அபிதாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!
இவர் பல படங்களில் விஜய்யின் நண்பராகவும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் இல்லை இல்லை. சஞ்சீவ உண்மையிலே தளபதி விஜய்யின் நெருங்கிய உயிர் நண்பன் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
சீரியல் நடிகர் சஞ்சீவ்:
விஜய் சஞ்சீவ் இருவரும் கல்லூரி காலத்தில் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்தார்கள். இப்போதும் அடிக்கடி தங்களது நண்பர்களை சந்தித்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகும்.
மாஸ்டர் திரைப்படத்தில் கூட தனது நண்பனுக்கு ஒரு சிறிய ரோலை கொடுத்திருந்தார். சஞ்சீவ் திரைப்படங்களில் விஜய்யின் நண்பராக நடித்தது மட்டும் இல்லாமல்,
இதையும் படியுங்கள்: 42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!
2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் வில்லனாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
சிறந்த நடிகருக்கான விருது:
சீரியலில் வில்லனாகவும் சில சீரியல்களின் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக திருமதி செல்வம் நாடகத்தில் நடித்ததற்காக கடந்த 2009 ஆம் ஆண்டில் சிறந்த தொலைக்காட்சி நடிகர்களுக்கான தமிழ்நாடு மாநில விருதும்,
திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்ப விருதுமையும் பெற்றிருக்கிறார்.
சஞ்சய் மெட்டி ஒலி, அண்ணாமலை, தற்காப்பு கலை தீராத, ஆனந்தம், அகல்வியா, மனைவி, வேப்பிலைக்காரி, பெண், திருமதி செல்வம், துளசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையயே மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
திரைப்படம் என எடுத்துக்கொண்டால் “பொன்மன செல்வன்” என்ற திரைப்படத்தில் 1989ல் கவுண்டமணியின் மகனாக நடித்திருப்பார்.
விஜய் படங்களில் சஞ்சீவ்:
அப்போதே இவர் திரைத்துறைக்கு வந்து விட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. தொடர்ந்து சந்திரலேகா நிலவே வா, பத்ரி, என் மன வானில், புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!
குறிப்பாக விஜய்யின் நண்பனாக இதில் பல திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய்க்கு மட்டும் நெருங்கிய நண்பர் இல்லை….
நடிகர் சூர்யாவுக்கும் நெருங்கிய நண்பர் தானாம். ஆம், சூர்யா பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே சஞ்சீவ் சூர்யா விஜய் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் லொயோலா கல்லூரியில் இவர்கள் படிக்கும் போது மூவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள்.
சூர்யாவின் நண்பன் சஞ்சீவ்:
ஆனால், சூர்யா கொஞ்சம் கூச்ச சம்பவம் கொண்டவர் என்பதால் இந்த கேங்கில் இருந்து கொஞ்சம் வெளிப்பட்டே தெரிவாராம்.
இந்நிலையில் ஒருமுறை சஞ்சீவின் பிறந்தநாளுக்கு சூர்யா போன் செய்து எங்க இருக்க? என கேட்ட உடனே அவர் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறேன் என்று சொன்னாராம்.
சரி நீ வா வீட்டுக்கு நான் உன்னை பார்க்க வரேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணவர். வீட்டுக்கு வந்ததும் உனக்கு என்ன மாதிரியான கிப்ட் வேண்டும் சொல்லு என கேட்டாராம்.
கார் பைக் என எது வேண்டுமானாலும் கேளு நான் தரேன். ஆனால் உனக்காக நான் ஒரு கிப்ட் தரணும்னு சொல்லி நினைச்சிருப்பேன் இல்லையா அதுவும் உனக்கு ரத்தன் அப்படின்னு சொல்லி இருக்காரு.
அப்படி அவரு சொல்லி தந்த விஷயம்தான் ஒரு புக். அந்த புக் என்னோட என்னோட வாழ்க்கையும் ஜோதிகா வாழ்க்கையுமே புரட்டி போட்டுச்சு.
இன்னைக்கு நாங்க இந்த அளவுக்கு இருக்குறதுக்கு காரணமே அந்த புத்தகம் தான். இது கண்டிப்பா உனக்கு மிகப்பெரிய யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி ஒரு புத்தகத்தை தந்திருக்கிறார்.
சூர்யா கொடுத்த கிப்ட்:
அந்த புத்தகத்தோட பேரு தான் “தி சீக்ரெட்” இந்த படித்த சஞ்சீவிர்க்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாம்.
இதையும் படியுங்கள்: சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!
இந்த அளவுக்கு சூர்யா தனது நண்பனின் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் அக்கறையாக இருந்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுவரை பலரும் அறிந்திராத இந்த விஷயம் தற்போது கசிந்து கவனத்தையும் ஈர்த்து பேசும்பொருளாகியுள்ளது.