முதல் தேர்தலிலேயே பலே கூட்டணி.. விஜய் எடுத்த அதிரடி மூவ்..! பதற்றத்தில் தமிழக அரசியல் களம்..!

தமிழ் திரைப்படத்துறையில் உச்ச நடிகராக சிறந்து விளங்கி வந்த நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என தனக்கான கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று சிறப்பாக இருந்து வந்தார்.

நடிகர் விஜய்:

இப்படியான சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் திடீரென ஆரம்பித்தது.

ஆம், இதற்காக அவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அரசியலில் அடித்தளம் போட ஆரம்பித்தார்.

அதாவது,10 ம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது மற்றும் விலையில்லா விருந்தகம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக தேடி தேடி செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் அரசியலில் இறங்கப் போவதை மறைமுகமாக அறிவித்து வந்தார். இதனுடையே திடீரென கடத்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.

இதை அடுத்து விஜய்க்கு பல கோடி கணக்கான ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். அத்துடன் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலமாக தனது ரசிகர்களின் மூலமாக மக்களுக்கு தொடர்ச்சியாக நலதட்ட உதவிகளை தமிழகமெங்கும் செய்து வரத் தொடங்கினார்.

அரசியல் என்ட்ரி:

விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் ஆளும் கட்சியினரையே ஆட வைத்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரின் அரசியல் பிரவேசத்திற்காக ஆறுவாரத்தோடு வரவேற்றனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் தனது மேனேஜர் ஆன புஸ்லி ஆனந்த் உடன் இணைந்து அரசியல் கட்சிகளையும் அதன் வேலைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் படத்தின் படப்பிடிப்புகளில் மும்முறமாக இறங்கி நடித்து முடித்துவிட்டு கடைசியாக ஒரு படத்தோடு தனது திரை பயணத்தை முடித்துக் கொள்ள இருக்கிறாராம்.

முழு வீச்சில் அரசியலில் இறங்க காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட வருகிறார் .

இதற்கு முன்னதாக ஜூன் 18ஆம் தேதி கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் இந்த கூட்டத்தில் பல எதிர்பாராத திடீர்னு திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் TVK கட்சி தன்னுடைய முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சீமான் உடன் விஜய் கூட்டணி?

அதன் படி, நாம் தமிழர், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் என பிரமாண்டமான கூட்டணியுடன் அரசியல் களம் காண இருக்கிறது.

இதில் குறிப்பிடும் படியாக நாம் தமிழர் கட்சி முதன் முறையாக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும், நாம் தமிழர் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் தற்போது தமிழக ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் என்பது குறிப்பிடதக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version