தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. துபாயில் கணக்காளராக பணி புரிந்த இவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சென்னைக்கு வந்து வாய்ப்புகளை தேடி இன்று ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
தற்போது விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8-ல் தொகுப்பாளராக களம் இறங்கக் கூடிய இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.
கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி..
இந்நிலையில் இவர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் பலரையும் ஆச்சிரியத்தில் தள்ள கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். இதற்கு காரணம் இந்த பேட்டியில் கோபிநாத் சூது கவ்வும் படத்தில் ஹீரோயினியை கடத்திச் செல்வது போல நீங்கள் யாரை கடத்தி செல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி சற்றும் தயங்காமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கடத்த விரும்புவதாக சொல்லி அதை அடுத்து அரங்கமே அதிர்ந்தது. அது மட்டுமல்லாமல் அவர் நடந்து வரும் போது தான் பார்த்ததாகவும் அப்போதே கட்ட வேண்டும் என்று தோன்றியதாகவும் சொல்லி இருக்கிறார்.
இதை தொடர்ந்து உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? நயன்தாராவை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது வெள்ளந்தி தனமாக சிரித்தபடியே அப்போதே சொல்லிவிட்டேனே என்று மழுப்பலாக சிரித்தபடி பேசினார்.
மேலும் மேடையின் கீழ் அமர்ந்து இதையெல்லாம் பார்த்து வந்த நயன்தாரா வெட்கத்தால் சிரித்த வண்ணம் அமர்ந்திருக்க ஏன் வெட்கப்பட வைக்கிறீங்க என்ற கேள்வியையும் விஜய் சேதுபதி முன் வைத்தார்.
அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்..
இதைத் தொடர்ந்து டிடி விஜய் சேதுபதியை கலாய்க்க போதும் டிடி ப்ளீஸ் என்று விஜய் சேதுபதி கூறினார். மேலும் அந்த படத்தில் வரும் விஜய் சேதுபதியின் பாப்புலரான டயலாக்கை பேசும் படி கேட்டுக் கொண்டார்கள்.
இதை அடுத்து நயன்தாராவை பார்த்து சொல்லும் படி கேட்டுக் கொண்டதை அடுத்து ப்ப்பா… ஆ செம என்று சொல்லியதை அடுத்து அரங்கமே அதிர்ந்தது. இதனை அடுத்து இந்த வீடியோவானது தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது பழைய வீடியோ என்றாலும் ரசிகர்கள் இதை ரசித்து பார்த்து வருவதோடு விஜய் சேதுபதியை நக்கலாக கலாய்த்து இருக்கிறார்கள். இது திரை உலகில் இவர் நுழைந்த சமயத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.