விஜய் அதை கேட்ட போது.. எனக்கு ரொம்ப அசிங்கமா ஆயிடுச்சு.. – வெளிப்படையாக கூறிய விக்ரம் “Agent Tina”..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் கூட்டணியில் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்திருந்த சில கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறின.

இந்நிலையில் இந்த படத்தில் வேலையை செய்யும் பெண்ணாக இருந்து ஒரு சில நிமிடங்கள் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்திய Agent Tina என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை வசந்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் நடன கலைஞராகவும் பணியாற்றி வருகின்றார். நடிகர் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரது படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இவரது பழைய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த வசந்த இது என்று அதிர்ச்சியில் ஆழ்த்தனர்.

 

இந்நிலையில் நடிகர் அஜித்தின் வில்லன் மற்றும் நடிகர் விஜயின் பகவதி என இரண்டு திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் வசந்தி. குறிப்பாக இந்த இரண்டு பாடல்களிலும் ஒரே ஆடையை அணிந்து கொண்டு நடனம் ஆடி உள்ளார்.

இதனை அவதானித்த நடிகர் விஜய் வசந்தியை அழைத்து என்னங்க அந்த படத்திலும் இதே டிரஸ் போட்டு இருக்கீங்க.. இந்த படத்திலும் இதே டிரஸ் போட்டு இருக்கீங்க.. என்று சிரித்தபடியே கேட்டுள்ளார்.

நடிகர் விஜய் இப்படி கேட்ட போது எனக்கு ரொம்ப அசிங்கமா ஆயிடுச்சு என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை வசந்தி. விக்ரம் படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல வெளிச்சம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் சினிமாவில் நல்ல நல கதாபாத்திரங்கள் இவரை தேடி வரவேண்டும் என்று இவரது நடிப்பை ரசித்த ரசிகர்கள் தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …