தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஐ.
காதல், செண்டிமெண்ட், ஆக்சன், விஞ்ஞானம் என பல வித்தியாசமான அம்சங்களை கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களை மிரட்டி எடுத்தது .
“ஐ” திரைப்படம்:
குறிப்பாக விக்ரமின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. மிரட்டலான அவரது நடிப்பு விழிகளை பிதுங்கி பார்க்க வைத்தது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்திருந்தார். விக்ரம் இப்படத்தில் லிங்கேசன் என்ற கேரக்டரில் ஆணழகன் ஆக நடித்திருந்தார்
அதன் பிறகு இவருக்குள் ஏற்படும் மாற்றம் பலவிதமான கேரக்டராக உருவாக்க துவங்குகிறது. மேலும் எமி ஜாக்சன் உடன் அவர் காதல் வழிப்பட்டு அவர் மீது அதீத அன்பை காட்டும் போது விக்ரமின் நடிப்பு அவ்வளவு சாதுவாக இருக்கும்.
அதே போன்று முகம் சிதைந்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் போது அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பு எல்லோரையும் தியேட்டரில் கலங்க வைத்தது.
இப்படி அந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்டரூ. 239 கோடி வசூல் ஈட்டி உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்திருந்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரை பலரது ஃபேவரைட் லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறது .
உயிரை பனையவைத்த விக்ரம்:
இந்நிலையை இப்படத்திற்காக விக்ரம் எடுத்த படு பயங்கரமான ரிஸ்க் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.
ஐ படத்திற்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்கை எந்த ஒரு நடிகராலும் பண்ணவே முடியாது. இந்த படத்தில் விக்ரமுக்கு மொத்தம் நாலு கேரக்டர் இருக்கும்.
பாடி பில்டர் ,பாடி பீஸ்ட் , நார்மல் மேன், ஃபார்முடு மேன், பாடி பில்டர் உள்ளிட்ட பல விதமான கேரக்டர்களை ஏற்று நடித்திருந்தார்.
இதில் பாடி பில்டர் தோற்றத்தை வரவைக்க அவர் நிறைய சத்தான உணவுகளையும் முளைகட்டின பயிர்களையும் சாப்பிட்டு உடலை கட்டுக்கோப்பாக முரட்டுத்தனமாக மாற்றினார்.
அதன் பிறகு நார்மல் மேனுக்காக அவரின் உடற்பயிற்சி செய்து உடலை லிமிட்டான தோற்றத்தில் வைத்திருந்தார்.
ஒரு நாளைக்கு 10 முறை சாப்பிட்ட விக்ரம்:
ஃபார்முடு மேன் தோற்றத்திற்காக உடலை அவர் வறுத்த ஆரம்பித்து மிகவும் கஷ்டப்பட்டார். அதுதான் மிகவும் ரிஸ்க் எடுத்து செய்தாராம் விக்ரம்.
அந்த தோற்றத்திற்காக உடல் எடையை மிகவும் கம்மியாகும் ஒல்லியான தோற்றத்தில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்சமா உணவுகளை பிரித்து கிட்டத்தட்ட 10 முறை சாப்பிடுவாராம்.
அதாவது ஒரு முட்டையின் வெள்ளை கரு , பாதி அளவு ஆப்பிள், ரெண்டு ஸ்பூன் சாப்பாடு இப்படி அளவான உணவை சாப்பிட்டு கிட்டத்தட்ட தினமும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளிங் செய்து தனது உடலை மிகவும் ஒல்லியாக வருத்திவிட்டாராம்.
அத்துடன் தினமும் மூன்று முறை ஒர்க்அவுட் செய்து மணி கணக்கில் ஜிம்மில் கிடந்தாராம். இதன் மூலம் அவர் கிட்டத்தட்ட 30 கிலோ உடல் எடையை குறைத்தாராம்.
பின் விளைவுகள்:
ஃபார்முடுமேனிற்காக மேக்கப் போடுவதற்காக மட்டுமே தினமும் நாளிலிருந்து 5 மணி நேரம் எடுக்குமாம். உடல் எடை மிகவும் ஒல்லியாக குறைத்ததால் இவரது தோற்றம் பார்ப்பதற்கு மிகவும் மெலிந்துபோனதாம்.
விக்ரமா இது? என கேட்கும் அளவுக்கு மாறியதோடு அதனால் நிறைய சைடு எஃபக்ட்களையும் அனுபவித்தாராம்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சவுண்ட் அதிகமாக ஏதேனும் ஒரு சத்தத்தை கேட்டால் கூட ஆட்டோமேட்டிக்காக உடல் நடுங்கும் அளவிற்கு விக்ரம் அவ்வளவு வீக்காக இருந்தாராம்.
இந்த அளவுக்கு இவர் உடலை உடல் எடையை குறைத்து வருத்திக்கொண்டு நடிக்க வேண்டும் என யாருமே சொல்லவில்லையாம்.
படத்தின் இயக்குனரான சங்கர் கூட அப்படி எல்லாம் சொல்லவே இல்லையாம். எந்த ஒரு கட்டாயமும் விதிக்கப்படவில்லையாம்.
ஆனால் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக விக்ரம் தாமாகவே முன்வந்து செல்ப் டெடிகேஷன் உடன் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பது போன்று யாராலும் இந்த படத்தை இந்த அளவுக்கு டெடிகேஷன் உடன் நடித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். நிச்சயம் முடியாது என்கிறார்கள் சியான் விக்ரமின் ரசிகர்கள்.