வழக்கம் போல ஆகுமா பாலிவுட்…? – இல்லை, விக்ரம் வேதா ரீமேக் தூக்கி நிறுத்துமா..?

தற்போது ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்து இருக்கக்கூடிய பாலிவுட் படமான விக்ரம் வேதா எப்படி இருக்கிறது என்றால் பாலிவுட் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்க கூடிய இந்த தருணத்தில் இந்த படமானது உயிர் கொடுப்பது போல ஒரு பிடிமானத்தை கொடுத்திருக்கிறது என்று கூறுமளவுக்கு சூப்பர் டூப்பராக உள்ளது.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான பிரம்மாண்டமானது பெரிய தோல்வியை சந்தித்தது எனினும் படம் வெற்றி பெற்றது என்று போலியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த படம் வெளிவந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை தாறுமாறாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் திரை வட்டாரத்திலும் இருந்தது.

தற்போது புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளிவந்துள்ள விக்ரம் வேதா  சைப் அலிகான் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படமானது தமிழில்  மாதவன் மற்றும் விஜயசேதுபதி இருவரின் கூட்டணியில் வெளிவந்த வெற்றி படம் தான். தற்போது இது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழில் இப்படி ஒரு மாஸ் படமாக இது வெளிவந்தது அதேபோல் எந்தவித குறையும் இல்லாமல் மிகவும் மாஸாக ஹிந்தியிலும் இந்தப்படம் நகர்ந்திருக்கிறது என்று ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள்.

மேலும் யூகிக்க முடியாத அளவில் இந்தப் படத்தில் திருப்பங்கள் இருப்பதால் இந்தப் படம் நிச்சயமாக பாலிவுட்டில்  மிரட்டலாக வலம் வரும் என்று அவிப்பிரயம் எழுந்துள்ளது.

 இந்தப் படத்திற்கான வெற்றி இதன் இயக்குனர் ஆகிய புஷ்கர் காயத்ரி சாரும் இதையடுத்து படம் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது. நிச்சயமாக பாலிவுட்டில் தூக்கி நிறுத்தக்கூடிய அம்சங்கள் இதில் உள்ளது என்று அனைவரும் பேசிவருகிறார்கள். இதையடுத்து பாலிவுட் நடிகர்கள் அனைவரும் நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து விக்ரம் வேதா பற்றி வந்த நெகட்டிவ் கருத்துக்களை எல்லாம் முறியடித்து தற்போது பாசிட்டிவான முறையில் படம் பட்டையை கிளப்பி வருவதால் ரசிகர்கள் அனைவரும் ரித்திக் ரோஷனை வாழ்த்தி வருகிறார்கள். மேலும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக நின்ற இயக்குனரையும் வாழ்த்துகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …