அன்றாடம் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி சுவாமியை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைகிறோம். அதிலும் குறிப்பாக நாம் ஏற்றும் விளக்குகளின் வகைகள் மற்றும் எண்ணெய்களின் மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அதுபோலவே நாம் பயன்படுத்துகின்ற திரிகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த பலன்கள் என்ன என்ன எந்த திரியை போட வேண்டும். யார் யார் இதை பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக இப்போது காணலாம்.
குழந்தை பாக்கியம் பெற
நீண்ட நெடிய நாட்களாக திருமணம் ஆகி குழந்தை பேரு உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையா? இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் நீங்கள் மாலை நேரத்தில் ஏற்றும் தீபத்தில் வாழை நார் திரியை பயன்படுத்திய நீங்கள் விளக்கு ஏற்றும் போது உங்கள் வம்சம் விருத்தியாகும்.
வாழைத்தண்டை நீங்கள் நறுக்கும்போது எடுக்கின்ற அந்த நாரை திரி போல அப்படியே நீங்கள் மாற்றி அதை வெயிலில் உலர்த்தி விட்டு உங்கள் விளக்குகளில் திரியாக பயன்படுத்தி இந்த பயனை பெறுங்கள்.
அஷ்ட ஐஸ்வர்யம் பெற
உங்கள் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யம் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் உங்கள் வீட்டில் ஏற்றும் தீபத்தில் திரியாக தாமரை தண்டு திரியை போட்டு வந்தால் மகாலட்சுமி உங்களுக்கு மகத்தான கடாட்சத்தை அளிப்பார். இதன் மூலம் அஷ்ட ஐஸ்வரியங்கள் உங்கள் வீட்டில் விரைவில் வந்து சேரும் இந்த தாமரை தெரியாதது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
நோய் நொடியில் இல்லாமல் இருக்க
உங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பஞ்சு திரியை உங்கள் வீட்டில் போடுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நபர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும் எந்த விதமான நோய்களும் அண்டாது.
பணக்கஷ்டம் தீர
அதிக அளவு கடன் மற்றும் பணக்கஷ்டத்தால் உங்கள் குடும்பம் தத்தளித்து வந்தால் கவலை கொள்ளாமல் வெள்ளை எருக்கு திரியை பயன்படுத்தி விளக்கேற்ற விநாயகப் பெருமானின் பரிபூரண அருள் கிடைப்பதால் உங்களுக்கு ஏற்படும்.மேலும் அந்த பண பற்றாக்குறை நீங்கி விரைவில் கடனை கட்டி செழிப்பாக வளருவீர்கள்.
திருமணம் நடைபெற
விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் சிவப்பு நிற திரியை பயன்படுத்தி விளக்கினை ஏற்றும்போது உங்களுக்கு ஏற்படும் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் ஆகும்.