காதலை உறுதி செய்த சேரன் பட நாயகி விமலா ராமன்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் தான்..!

தமிழ் சினிமாவுக்கு பல பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய கே பாலச்சந்தரை சாரும் இவரின் அறிமுகம் தான் விமலா ராமன் என்பது உங்களுக்கு தெரியுமா.

இவர் இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய இயக்குனரான சேரன் இயக்கத்தில் வெளி வந்த ராமன் தேடிய சீதை என்ற படத்தில் நடித்தது மூலம் பிரபலமான நடிகைகளின் வரிசையில் உயர்ந்தார்.

 இவர் மலையாள பிரபல நடிகையாக திகழ்ந்து வரும்போது வினய் என்ற நடிகரை காதலித்து விருகிறார் என்ற கிசுகிசுக்கள் அடிக்கடி வெளிவந்த நிலையில் அதற்கு எந்த விதமான மறுப்போ அல்லது உண்மைதான் என்பது போன்ற பதில்களை அளிக்காமல் இருந்து வந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

 இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது இவர் Instagram பக்கத்தில் போட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்த விஷயத்தை ஊர்ஜிதம் செய்து விட்டது.

 மேலும் இவர் காதலித்து வரும் நடிகர் வினய் உன்னாலே உன்னாலே, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்தவர். தற்போது இவர் பல மாஸ் ஹீரோக்களோடு இணைந்து வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

 இந்த சூழ்நிலையில் நடிகை விமலா ராமன் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதில் விமலா ராமனுடன் இணைந்து வினய்யும் உணவருந்துவது போல் இருக்கக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி அவர்களது காதலை உறுதி செய்து இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த பதிவில் அவர் என்னுடைய குடும்பத்தோடு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருப்பதாக கூறி  இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் வினய்யும் இருப்பதால் சிம்பாலிக்காக தனது காதலை இவர் உணர்த்திருக்கிறார் என்று நெட்டின்சன்கள் கூறி வருகிறார்கள்.

 இதனை அடுத்து இவ்வளவு ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் மேலும் விரைவில் திருமண தேதியை அறிவிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version