மன்னிப்பு கேட்ட நிக்சன்..! வினுஷா கொடுத்த செருப்படி பதில்..!

கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இந்த 7வது சீசனில் துவக்கத்தில் இருந்தே வீட்டுக்குள் பிரச்னைகளுக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் அளவே இல்லாமல் போனது. ஒரு சீசனில் கூட இப்படி போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக்கொண்டது இல்லை. இந்த சீசனில் அது பலமுறை நடந்துக்கொண்டே இருந்தது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா பங்கேற்றார். அவரிடம் சக போட்டியாளர் நிக்சன் நட்பாக பழகினார். ஒரு கட்டத்தில் அவர், வினுஷாவை அக்கா, அக்கா என்று அழைத்த நிலையில் வினுஷா அவரிடம் சகோதரனாக மிகவும் அக்கறையாக நடந்துக்கொண்டார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், வீட்டுக்குள் இருப்பவர்களிடம் வினுஷா குறித்து, நிக்சன் சில தவறான விமர்சனத்தை முன்வைத்தார். அதுவும் அவரது உருவத்தை கேலி செய்தது போல பேசியதால் அது சர்ச்சையானது. இதுகுறித்து பலரும் கண்டித்தனர்.

நாளையுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார். நாளை நிறைவுவிழாவை முடித்துக்கொண்டுதான் அவர்கள் வீட்டை விட்டுச் செல்வர். இந்நிலையில், வீட்டுக்குள் வந்த வினுஷாவிடம் நிக்சன் முற்பட்டார். வினுஷாவிடம் நிக்சன் மன்னிப்பு கேட்டார்.

அதற்கு வினுஷா, அவர் பேசியது தவறு. பேசியதற்கு அப்போதே வருத்தமோ, மன்னிப்போ தெரிவித்திருக்க வேண்டும். அது அப்போதே தவறான ஒரு விஷயமாக பரவி விட்டது. தன்னை துன்புறுத்துகிறது என்ற காரணத்துக்கான என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம். அந்த மன்னிப்பு என்னிடம் செல்லுபடியாகாது. அதுமட்டுமின்றி அதுபற்றி மீண்டும் மீண்டும் பேசுவது மேலும் அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி தன்னை வருத்தப்பட வைப்பதாகவும் பிரமோவில் அவர் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam