சுந்தர் சி இயக்கும் படத்தில் இருந்து விஷால் விலகியது ஏன்?

தமிழ் நடிகர்களில் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவர் விஷால். அதே போல், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா என்ற முழுநீள நகைச்சுவை படம் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். 

மேட்டுக்குடி, முறைமாமன் என காமெடி படங்களை எடுத்த இவர், பேமஸ் ஆக இருந்த நடிகை குஷ்புவை மணம் புரிந்த பின், இன்னும் இவர் மீதான கவனம் அதிகரித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படத்தையும் இயக்கினார். உலகநாயகன் நடித்த கமல்ஹாசன் அன்பே சிவம் படத்தையும் தந்தார்.

அடுத்து, இவரும் பேய் படங்களுக்கு தாவினார். அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 படங்களை இயக்கிய நிலையில், அடுத்து அரண்மனை 4 படம், விரைவில் துவங்க உள்ளது. 

இப்படி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் சுந்தர் சி. படத்தில் இருந்து விலகி இருக்கிறார் விஷால். 

சமீப காலமாக, விஷால் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. சங்கமித்ரா என்ற படத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவும், அதில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதியும் நடிப்பதாக இருந்தது.

ஆனால், பைனான்ஸ் காரணமாக, அந்த படம் துவங்கப்படவில்லை. இதையடுத்து, சங்கமித்ரா படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பதாக தகவல் பரவியது. ஆனால், திடீரென அந்த படத்தில் இருந்து, விஷால் விலகியதாகத் தெரிகிறது. அவர் எதிர்பார்த்த சம்பளம் தர சம்மதிக்காததால், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

ஏற்கனவே, சுந்தர் சி. இயக்கத்தில் ஆம்பள படத்தில், விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக விஷால் நடித்த படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சுந்தர் சி. படங்களுக்கு கமர்ஷியலாக நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த நல்ல வாய்ப்பை சம்பளம் காரணமாக, விஷால் மறுத்திருக்க கூடாது.

இந்த வாய்ப்பை அவர் நல்ல முறையில் பயன்படுத்தி இருந்தால், மீண்டும் அவர் பிஸியான நடிகராகும் வாய்ப்பு கூட கிடைத்திருக்கலாம் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …