என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இவரது குடும்பமும் திரை உலகை பின்புலமாகக் கொண்டது.

இதையும் படிங்க: நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் இவர் நடிகர் விஜய் போலவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி இருக்கிறார்.

நடிகர் விஷால்..

ஆரம்ப காலத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால் இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார்.

2004-ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2005 இல் சண்டைக்கோழி, திமிரு படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அடுத்து இவரின் பெயரை சொல்லக் கூடிய வகையில் தாமிரபரணி, மலைக்கோட்டை, தோரணை, அவன் இவன், வெடி, பூஜை, ஆம்பள போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களை அதிகளவு பெற்றார்.

இதனை அடுத்து 2018 இரும்புத்திரை படத்தில் நடித்த இவர் அதிகளவு பட வாய்ப்புக்களை பெறாமல் ஓரிரு படங்களில் மட்டுமே அடுத்தடுத்து நடித்து வந்தார். இவரும் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

என் படம் வரக்கூடாதுன்னு சொல்ல யார் நீ..

நடிகர் சிம்புவை போலவே படப்பிடிப்புக்கு காலம் தாழ்த்தி செல்லுவது போன்ற பழக்க வழக்கங்களால் சினிமா வாய்ப்பை இழந்திருந்த நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்க இருக்கும் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளி வந்து பரபரப்பாக பேசப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வந்து வெற்றியடைய வேண்டும் என்று விஷாலின் ரசிகர்கள் இறைவனைப் பிரார்த்தித்து வருகிறார்கள்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை விளாசும் விஷால்..

இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் அளித்த பேட்டி ஒன்றில் ரெட் ஜெயின் நிறுவனம் பற்றி காரசாரமான கருத்துக்களை கடும் கோபத்தோடு வெளியிட்டு இருக்கிறார்.

இந்த பேச்சின் போது அவர் ஒரு படத்தை தள்ளிப்போ என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமா என் கையில் இருக்கு என்று சொன்னவர்கள் யாரும் உருபட்டதாக சொல்ல முடியாது.

மேலும் என் தயாரிப்பாளர் வட்டி கட்டி கொண்டிருக்கிறார். நீங்க ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அந்த படம் வரக்கூடாது என சொல்லுறீங்க.. உங்களுக்கு யார் எந்த அதிகாரத்தை கொடுத்தது. நீங்கள் தான் தமிழ் சினிமாவை குத்தகைக்கி எடுத்து இருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

அத்தோடு 65 கோடி செலவு செய்து இருக்கிற மார்க் ஆண்டனி தயாரிப்பாளர் செப்டம்பர் 15 ரிலீஸ் என ஒன்றரை மாதத்திற்கு முன்பே அறிவித்துவிட்டார் வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல் நீங்கள் யார்.

நீயும் உன் படத்த ரிலீஸ் பண்ணு நானும் ரிலீஸ் பண்றேன். மக்கள் முடிவு செய்யட்டும். எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்க மட்டும் தான் ரிலீஸ் பண்ணி சம்பாதிக்க வேண்டும் என்ற டூல் இருக்கிறதா? என்று கடுமையாக காட்டத்தோடு சாடி இருக்கிறார்.

இதையும் படிங்க: என்ன பெரிய தமன்னா.. என்னோட தொடையை பாருங்க.. அநியாயம் பண்ணும் ராஷி கண்ணா..!

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி உதயநிதிக்கு ஆப்படித்த விஷாலின் பேச்சினை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் பலரும் சொல்ல நினைத்ததை விஷால் தற்போதும் பக்குவமாக நெத்தியடியாக சொல்லி இருப்பதாக திரையிடப்பட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version