கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்தார்.

மட்டுமில்லாமல் படம் குறித்த தன்னுடைய அனுபவம்.. படம் எப்படி வந்திருக்கிறது.. உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வந்திருந்தார்.

அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகர் விஷால் பயங்கர கடுப்பாகி பேசினார். அப்படி என்ன நடந்தது..? பயில்வான் என்ன கேள்வி கேட்டார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். முன்பதாக நடிகர் விஷால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு வழி விடுங்கள். பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் எப்படியாவது ஓடிவிடும்.

நாலு கோடி.. அஞ்சு கோடி எடுத்துகிட்டு வராதிங்க..

நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதனால் நான்கு கோடி மூன்று கோடி என்று பொருட்செலவில் படம் எடுக்கலாம் என்று சினிமா எடுக்க வந்து நட்டமாக்கி விடாதீர்கள்.

படம் எடுப்பதாக இருந்தால் நல்ல பொருள் செலவு செய்து படம் எடுக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் சினிமாவை தயாரிக்க வாருங்கள். ஏனென்றால் சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அனைத்தும் நட்டமாகி கிடக்கிறது.. படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நான்கு கோடி ஐந்து கோடி எடுத்துக்கொண்டு வராதீர்கள் என பழைய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இது பலருக்கும் தெரிந்திருக்கும்.

பயில்வான் கேள்வி..

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் இடம் நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் எழுப்பிய கேள்வி என்னவென்றால். அதாவது குறைந்த பொருள் செலவில் படம் எடுக்க வராதீர்கள்.. என்று நீங்கள் கூறுகிறீர்கள். சரி, ஆனால் மலையாளம் மொழியில் வெளியான பிரேமம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் எல்லாம் நீங்கள் சொன்ன பொருட்செலவை விட குறைவான பொருட்செலவில் எடுக்கப்பட்டவை.

இந்த படங்கள் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருக்கின்றன, இதற்கு உங்கள் பதில் என்ன..? நீங்கள் எப்படி சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க வேண்டாம் என்று கூறலாம் என கேள்வி எழுப்பினார்.

விஷால் பதில்..

இந்த கேள்வியை கேட்டதும் யார் இந்த கேள்வி எழுப்புவது.. என உற்று நோக்கிய விஷால்.. அடுத்த நொடியே.. பயில்வான் ரங்கநாதன் அண்ணா.. நான் உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்.. நீங்கள் என்னை கேள்வி கேட்கக்கூடாது… நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.. பதில் சொல்லவும் மாட்டேன்.

நான் ரத்னம் படத்தின் கதாநாயகனாக இந்த படத்தின் பிரமோஷனுக்காக வந்திருக்கிறேன். என்னை ஒரு நடிகர் சங்க தலைவராக.. பொதுச்செயலாளராக பேச வைத்து விடாதீர்கள். பயில்வான் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை என மூஞ்சியில அடித்தார் போல் பேசிவிட்டு அடுத்த கேள்விக்கு தாவி விட்டார் விஷால்.

இப்படியாக அந்த கூட்டம் சலசலப்புடன் நடைபெற்றது. விஷாலின் இந்த பதில் குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version