திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகர் விஜய் என்று தமிழில் முன்னணி நாயகராக உச்சகட்ட அந்தஸ்தை பெற்று அதிகப்படியான ரசிகர்களை பெற்றிருக்கின்ற விஷயம் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
தமிழகத்தை பொறுத்தவரை திரையில் நடிக்கும் நட்சத்திரங்கள் அரசியலில் களம் இறங்கி சிஎம் நாற்காலியை பிடிப்பது எம்ஜிஆர் காலம் முதற்கொண்டு நடந்து வருகிறது.
விஜய்யின் அரசியல் பிரவேசம்..
அந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த், இயக்குனர் சீமான், உலகநாயகன் கமலஹாசன் என பலரும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
இந்த வகையில் நடிகை ரோஜா, குஷ்பூ, நக்மா என பல நடிகைகளும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை அடுத்து ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி எப்போது அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த சிங்கங்களுக்கு விருந்து கொடுத்ததைப் போல தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து தளபதி விஜய் வெற்றி நடை போட தயாராகி விட்டார்.
இந்த சூழ்நிலையில் இவர் 2026 இல் முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என்ற கருத்துக்கள் வெளி வந்து உள்ள நிலையில் தனது ரசிகர் மன்றத்தை மக்களுக்காக பல பணிகளைச் செய்யும் மக்கள் மன்றமாக மாற்றி படிப்படியாக காய்களை நகர்த்தி இன்று கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
இதனை அடுத்து பல திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்களும் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்து வரக்கூடிய வேளையில் நடிகர் விஷாலின் தந்தை குண்டை தூக்கிப் போடக் கூடிய வகையில் பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஷாலின் தந்தை பேச்சு..
மேலும் நடிகர் விஷாலின் தந்தை ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்நிலையில் விஷாலும் அரசியலுக்கு வரக்கூடிய வகையில் அவ்வப்போது சர்ச்சை மிகு கருத்துக்களை பேசி விடுவார்.
இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து இருக்கக்கூடிய விஷால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து தற்போது தான் மீண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் இவரது தந்தையின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விஷாலின் தந்தை விஜய் பற்றி பேசுகையில் விஜய் அரசியல் வருவதற்கு முன்பு தனக்கு தேவையான பணத்தை கோடிக்கணக்கை சேர்த்து வைத்து விட்டு அதன் பிறகு தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். என்னுடைய மகனும் அப்படித்தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார் எனக் கூறினார்.
அது மட்டுமல்லாமல் நடிகர் விஜயின் அரசியலும், என் மகனின் அரசியலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, விஷாலின் தந்தை விஷாலின் அரசியல் வருகையை அறிவிக்கும் போது நடிகர் விஜய் பணம் சேர்த்து விட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று நீங்கள் கருத்து கூற வேண்டியது எல்லாம் அவசியம் தானா? பணம் சம்பாதிக்க தான் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
எனவே இந்தக் கேள்விக்கு உரிய பதிலை விஷாலின் தந்தை அளிக்கும் பட்சத்தில் இந்த சர்ச்சைகளில் இருந்து விடுபடலாம். இவரின் பதிலை எதிர்நோக்கி விஜயின் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.