நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஷால் போலீஸாக நடித்திருக்கும் லத்தி திரைப்படத்தின் டிரைலர்…!!

இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் பல ஆண்டுகளாக உருவாகி வரும் படம் தான் லத்தி இந்த படத்தை விஷாலின் நண்பர் ரமணா மற்றும் நந்தா தயாரித்திருக்கிறார்கள்.

 இந்த படத்தின் முக்கியமான கேரக்டர் ரோலில் நடிகை சுனைனா நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த லத்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக களம் இறக்கப்பட்டிருக்கும் விஷாலுக்கு இந்த படம் மாபெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 மேலும் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்படும் வெளியிட முடியாத சூழ்நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

 இந்த படத்தில் விஷால் ஒரு குடும்பத் தலைவனாக களம் கண்டிருக்கிறார். அதாவது மனைவி குழந்தை என சந்தோஷமாக வாழும் விஷால் சில காரணங்களால் போலீஸ் பதவியை இழக்கிறார். அதன் பிறகு மீண்டும் மகனுக்காக இந்த வேலையில் சேர்க்கிறார்.

 தனது கையில் கொடுக்கப்பட்டிருக்கும் லத்தியை கொண்டு ரவுடிகளை வெளுத்து வாங்கி இருக்கும் நடிகர் விஷால் அனல் பறக்கும் வசனங்களை இந்த படத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்.

தற்போது படத்துக்கான ட்ரெய்லரில் யுவன் சங்கர் ராஜா பிஜிஎம் வேறு லெவலில் கலக்கியுள்ளது. விஷால் லத்தி படத்தின் மூலம் தரமான கம்பாக்கை கொடுத்து மீண்டும் தன்னை நிரூபிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 மேலும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளிய வர உள்ள நிலையில் விஷாலின் துறை வாழ்க்கையை தீர்மானிக்கும் படமாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் லத்தி திரையிட உள்ளது.

ஏறக்குறைய நீண்ட காலங்களாக விஷாலின் படம் எதுவுமே திரைக்கு வராத நிலையில் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது.

இவற்றையெல்லாம் தகர்த்த கூடிய வகையில் வரக்கூடிய இந்த லத்தி படம் அவருக்கு மிக நல்ல திருப்புமுனையை கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மனம் உருக வேண்டி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …