நீண்ட நாட்களாக முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கின்ற செய்தி தற்போது படு வேகமாக பரவி வரக்கூடிய வேளையில் பொண்ணு யாரு.. என்ற கேள்வியும் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது 45 வயதை நெருங்கி விட்டார். ஏற்கனவே இவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி காதலிப்பதாக கிசு கிசுக்கள் எழுந்ததை அடுத்து இவர்கள் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இவர் அமெரிக்காவில் இருந்த போது ஒரு பெண்ணோடு சுற்றிவரும் வீடியோ அண்மையில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இது ஒரு பிராங் வீடியோ என்பதை விஷால் அதற்குரிய பதிலை பதிவு செய்து விளக்கியதின் மூலம் அந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனை அடுத்து நடிகர் விஷாலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகளோடு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் திருமணம் நடைபெறாமல் நின்று போனது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த சூழ்நிலைகள் தான் இவருக்கு பெரிய அளவில் திரைப்படங்கள் வெற்றி அடையவில்லை மேலும் இவர் நடிகர் சிம்பு போல சரியான நேரத்திற்கு ஷூட்டிங்-க்கு வராமல் போதையில் மட்டையாகி விட்டதாக தகவல்கள் கசிந்தது.
இந்நிலையில் மீண்டும் காதலில் விஷால் விழுந்து விட்டார் என்ற விஷயம் காட்டு தீயாய் பரவி வருகிறது. இவர் நடிகை அபிநயாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அபிநயா வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இந்நிலையில் தான் நடிகர் விஷால் அபிநயாவை காதலித்து வருவதாகவும் விரைவில் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
இதன் உண்மை நிலை என்ன என்பதை நடிகை அபிநயாவோ அல்லது நடிகர் விஷாலோ கூறினால் மட்டுமே தெரிய வரும் இவர்களின் பதிலுக்காக ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.