டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வந்த மதுப்பிரியர்கள்.. விஷால் செய்த வேலையை பாருங்க..!

தற்போது இணையம் எங்கும் நடிகர் விஷால் டாஸ்மாக் கடையில் மது வாங்க நின்ற இளைஞர்களை அடித்து, விரட்டி அடிப்பது போன்ற காட்சிகள் வெளி வந்து அனைவரையும் கவர்ந்து உள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் இடையில் பல படங்கள் கை கொடுக்காமல் தோல்வியை சந்தித்ததை அடுத்து தற்போது மீண்டும் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது ரத்னம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட சில காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. மேலும் சமூக அவலத்தை படம் பிடித்து காட்டக் கூடிய வகையில் இந்த வீடியோ உள்ளது.

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளி வர இருக்கும் ரத்னம் திரைப்படம் விஷாலின் 34 வது திரைப்படம் ஆகும். எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாகி இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் மேனன் போன்றவர்கள் முக்கிய கேரக்டர் ரோல்களை செய்ய இருக்கிறார்கள். இசையை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் தான் டாஸ்மாக் கடையில் புரட்சிகரமாக விஷால் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவாக வெளி வந்துள்ளது. இதனை விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் தனது twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதனை பார்த்து வரும் பொது மக்கள் அனைவருமே சமுதாயத்தில் நடக்கக்கூடிய உண்மையான நிலையை படம் பிடித்து காட்டக்கூடிய வகையில் இந்த படம் இருக்கும் என்று கூறியதோடு தற்போது பரவி இருக்கும் வீடியோவும் அதைத்தான் குறிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் திருட்டு விசிடிகளை விற்ற நபர்களை அவர்களின் கடைக்கே சென்று பிடித்து காவல்துறையில் புகார் அளித்தார். அது போல இந்த காட்சியும் ரியல் காட்சியா? அல்லது சித்தரிக்கப்பட்ட காட்சியா? என்று சற்று குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.

எனினும் இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதில் அனைவரும் தெளிவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும் படத்தின் பிரமோஷனுக்காக இந்த காட்சி இருக்குமா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்ற ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam