“இப்படி சொன்னவன் யாருமே உருப்பட்டதே இல்ல..” உதயநிதி நிறுவனம் குறித்து விஷால் ஓப்பன் டாக்..!

நடிகர் விஷால், இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஷால்

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலுக்கும், நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இடையே பனிப்போர் நிலவி வருகிறது என்பது தமிழ் திரை உலகினரும், ரசிகர்களும் அறிந்த உண்மைதான்.

ஆனால் துவக்கத்தில் மறைமுகமாக பனிப்போராக புதைந்து கொண்டிருந்த இவர்களது சண்டை என்பது, இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.

உதயநிதி ஸ்டாலின்

விஷால் படங்கள் வெளியாவதை தடுப்பதில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் தீவிரம் காட்டுவதும், அதை எதிர்த்து நடிகர் விஷால் போராடுவதும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இப்போது நடிகர் விஷால் நேரடியாகவே அமைச்சர் உதயநிதிக்கு எதிரான தனது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.

கோபத்தின் உச்சம்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகர் விஷால், என் படத்தை தடுக்க நீங்கள் யார் என்று உதயநிதி ஸ்டாலினை பார்த்து நேரடியாகவே கேள்வி எழுப்பி விட்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்னை இருக்கிறது

நடிகர் விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது உங்களுக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் ஏதோ பகை என்று தகவல்கள் வருகின்றன. அது உண்மையா..?

ஆனால் நீங்களும், உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். என்ன பிரச்சனை.? நிஜமாகவே உங்களுக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஷால், ஆம் எனக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் பிரச்சனை இருக்கிறது என்பது உண்மைதான். என்னுடைய எனிமி திரைப்படம் வெளியான போது இந்த படத்தை இப்போது வெளியிடக்கூடாது, சில நாட்கள் தள்ளி வெளியிடுங்கள் என்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூறினார்கள்.

நீங்கள் யார்?

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. என்னுடைய படத்தை எப்போது வேண்டுமானாலும் நான் ரிலீஸ் செய்வேன். என்னுடன் போட்டிக்கு நீங்கள் ரிலீஸ் செய்கிறீர்களா..? தயவு செய்து செய்யுங்கள்.. யார் நல்ல படம் எடுத்திருக்கிறார்களோ அதற்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டு போகிறார்கள்.

ஆனால், இந்த தேதியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று மிரட்ட நீங்கள் யார்..? உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது..? தமிழ் சினிமாவே உங்களுடையது என்பது போல பேசுவதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சினிமா என் கைக்குள் இருக்கிறது

சினிமா உலகமே என் கைக்குள் தான் இருக்கிறது என பேசிய எல்லோரும் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.. அப்படி சொன்னவன் யாரும் உருப்பட்டதே கிடையாது.. என்று உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்து நடிகர் விஷால் காட்டமாக பேசியிருக்கிறார்.

சினிமா என் கைக்குள் இருக்கிறது என்று சொன்னவன் யாருமே உருப்பட்டதே இல்ல என்று நேரடியாக உதயநிதி நிறுவனம் குறித்து விஷால் வெளிப்படையாக பேசியிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version