புது பொண்டாட்டி வந்த நேரம் விஷ்ணு விஷால் லைப்பில் எக்கச்சக்க படங்கள்…!!

 நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இப்போது அதிர்ஷ்டம் பல பக்கங்களில் இருந்து பக்காவாக வீசுகிறது என்று கூறலாம்.இதற்கு காரணமாக அவர் கூறுவது தனது இரண்டாவது மனைவி வந்த வேளைதான் பல படங்கள் பக்காவாக தன் கைவசம் தற்போது வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் மனைவிக்கு சினிமா வட்டாரத்தில் நிறைய பிரபலங்களுடன் நட்பு இருப்பதினால் அவர் சிபாரிசு செய்து கணவருக்கான வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

 அந்த வகையில் தான் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் பேசி லால் சலாம் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை தன் கணவருக்கு பெற்று தந்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்க இருக்கிறார்.

 அண்மையில் வெளிவந்த விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிக ஜோராக ஓடி வருகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதன் மூலம் வசூலில் பட்டையை கிளப்பிய இந்த படத்தினால் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்துள்ளதால் ஏறக்குறைய சுமார் 9 படங்கள் வரை தன்னிடம் இருப்பதாக இவர் கூறுகிறார்.

 அந்த வரிசையில் லால் சலாம், வீர தீர சூரன், ஆரியன், மோகன் தாஸ், ஜெக தால கில்லாடி போன்ற படங்கள் இதில் உள்ளது.இதனை அடுத்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசாக கூடிய வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இவர் அண்மையில் இவன் நடித்த படங்கள் சரியாக போகவில்லை இதற்கு சொந்த  வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தான் இது என்று கூறி வருகிறார்கள். இதனை அடுத்து தற்போது வாழ்க்கையில் சரி சினிமா படத்திலும் சரி அவருக்கு அதிர்ஷ்டம் கொட்ட ஆரம்பித்துள்ளது.

 இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இவர் சினிமா உலகின் உச்சத்திற்கு செல்லலாம் என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …