இன்று உள்ள சூழ்நிலையில் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் அதிக நெருக்கடிகள் மற்றும் சிக்கல்கள் உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் மேலும் இதில் அரசியல் பின்புலம் படு வேகமாக செயல்பட்டு வருவதால் இதில் இருந்து எப்படி திரைத்துறை தப்பிக்கும் என தெரியவில்லை என்ற கருத்தை கூறியிருக்கிறார்.
மேலும் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஸ்தி என்ற திரைப்படம் திரைக்கு வெளிவர உள்ள நிலையில் இவர் இந்த மாதிரி பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் தொடர்பாக அவர்கள் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார்கள். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்ட இந்தப் படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக விளங்கும் என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் படங்கள் அனைத்தும் இந்திய அளவில் பேசப்படுகின்ற படமாக தற்போது தரத்தோடு உயர்ந்துள்ளது என்று சொன்னார்.
மேலும் அவர் பேசும் போது ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கி விடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை எனவும் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகள் கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என்று இவர் கருதுவதாக கூறியிருக்கிறார்.
இதை அடுத்து இவர் எதை மையமாக நினைத்து இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட செய்தியாளர்கள் அவரிடம் மேலும் அதிகமாக ஏதும் கேட்கவில்லை.
ஏற்கனவே தளபதி விஜயின் வாரிசு படம் தெலுங்கில் வெளியாக பலவித தடைகளை சந்தித்து வரக்கூடிய வேளையில் விஷ்ணு விஷாலின் இது போன்ற பேச்சு தளபதி விஜய்க்கு ஆதரவாக இருக்கும் என்பது போல தெரிகிறது.